குறள் 18 - Kural 18 / வான்சிறப்பு |
குறள் : 18,
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
Translation":
"The earth, beneath a barren sky, Would offerings for the gods deny
மு.வ :
"மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது
சாலமன் பாப்பையா :
"மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது
கலைஞர் உரை :
"வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?
couplet": "If heaven grow dry, with feast and offering never more,Will men on earth the heavenly ones adore
explanation": "If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials
transliteration1": "Sirappotu Poosanai Sellaadhu Vaanam
transliteration2": "Varakkumel Vaanorkkum Eentu"