திருக்குறள்-4 |
குறள் அதிகாரம் : கடவுள் வாழ்த்து
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
குறள் பால் : அறத்துப்பால் ( Araththuppaal) (Virtue )
குறள் இயல் : பாயிரவியல் (Paayiraviyal) (Prologue )
குறள் விளக்கம் :
மு.வ உரை:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை
சாலமன் பாப்பையா உரை:
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை
கலைஞர் உரை:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை
Kural Translation :
Who hold His feet who likes nor loathes Are free from woes of human births
kural Explanation :
To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come
Kurala Couplet :
His foot, ‘Whom want affects not, irks not grief,’ who gainShall not, through every time, of any woes complain
Kural Transliteration :
Ventudhal Ventaamai Ilaanati Serndhaarkku
Yaantum Itumpai Ila