2022 புத்தாண்டு கும்பம் ராசி பலன்கள் - New Year Rasi Palan Kumbam 2022 |
கும்ப ராசி அன்பர்களே
இந்த ஆண்டு பொதுவாகத் தீமைகள் இருக்குமானாலும் பாதிப்பு பெரிதாக இருக்காது. சில நன்மைகள் சிறப்பாக உண்டாக வாய்ப்புண்டு. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கப்படலாம். குடும்ப நலம் பாதிக்காமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். நன்மைகளும் உண்டு; தீமைகளும் உண்டு. ஆனால் நன்மைகள் சற்றுத் தூக்கலாகவே நடக்க வாய்ப்புண்டு. பொருளாதார நிலையில் சரிவு ஏற்படாது. உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். +குடும்ப நலம் சீராக இருக்கும். உங்களுடைய கௌரவம் பாதிக்கப்படாமல் இருக்க இடமுண்டு. நல்லோர் ஆசியை விரும்பிப் பெறுங்கள். அன்றாடப் பணிகளுச்குக் இடையூறு இருக்காது. ஏற்படும் கஷ்டங்கள் சற்று மட்டுப்பட வாய்ப்புண்டு. பெரியோர் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய சௌகரியமான வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும்.
குடும்பம்:
குடும்பத்தைப் பொறுத்தவரை கும்ப ராசிக்காரர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவ இருக்கிறது. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். உற்றார், உறவினர்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டு. போதுமான நேரத்தை குடும்பத்திற்காக செலவிடுவது நல்லது. இவ்வாண்டு உங்களுக்கு எதிர்பாராத திடீர் நல்ல விஷயங்கள் குடும்பத்தில் நடக்க இருக்கிறது. புதிய நபரின் வருகை உண்டு. குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. மாணவர்கள் தங்களுடைய திறமையை மேலும் வளர்த்துக் கொள்வார்கள். எதையும் அதன் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது.
பொருளாதாரம்:
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டில் நீங்கள் தேவையற்ற இழப்புக்களைச் சந்தித்து இருப்பீர்கள். ஆனால் 2022ஆம் ஆண்டில் பொருளாதாரம் உங்களுக்கு பொறுப்பு சுமையை குறைக்க இருக்கிறது. கடந்தகால சேமிப்புகள், முதலீடுகள் போன்றவற்றால் இவ்வாண்டு அற்புத பலன்களை பெற இருக்கிறீர்கள். சுப காரியச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் நவீன பொருள் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
தொழில்:
தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் உங்களுக்கு கிடைக்க கூடிய அற்புதமான பலன்கள் மற்றவர்களை வியப்படையச் செய்யும். எதுவும் செய்யாமலேயே உங்கள் தகுதிக்கு ஏற்ப அதிர்ஷ்டம் வீடு தேடி வரும். தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்றாலும் வாடிக்கையாளர்கள் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க இருக்கிறது. கலைப் பொருட்கள் சார்ந்த விஷயங்களில் வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கும்ப ராசிக்காரர்கள் 2022ஆம் ஆண்டில் கவனத்துடன் இருப்பது நல்லது. இதுவரை சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டிருந்தது ஆனால் 2022ஆம் ஆண்டில் சுவாசம், நுரையீரல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். கண் தொடர்பான பிரச்சினைகளும் படை எடுக்க ஆரம்பிக்கும் எனவே ஆரோக்கிய ரீதியான விஷயங்களை கவனித்து கொள்வது நல்லது. மேலும் சிறு பிரச்சினையாக இருக்கும் பொழுதே மருத்துவ ஆலோசனை பெறுவது உத்தமம். சுவாச பிரச்சனைகள் இருப்பின் மூச்சு பயிற்சி செய்வது நல்லது.
காதல்:
கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் காதல் மேலும் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு. திருமணமாகாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நபரை திருமணம் புரிய நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். திருமணமான புதுமண தம்பதிகளுக்கு அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க இருக்கிறது.
பரிகாரம்:
வருமானம் அதிகரிக்க புதன் கிழமையில் புத பகவானை வழிபடுவது சிறப்பு. மேலும் உங்கள் ராசிக்கு 2022 இரண்டாம் ஆண்டு மகாலட்சுமிக்கு நெய் தீபம் போடுவது நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும். மேலும் அதிர்ஷ்டம் சேர சனிக்கிழமைகளில் தாய் அல்லது தந்தையை இழந்த ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வரலாம்.