2022 புத்தாண்டு தனுசு ராசி பலன்கள் - New Year Rasi Palan Dhanusu 2022

     தனுசு ராசி அன்பர்களே 

    இந்த ஆண்டு பொருளாதார நிலையில் எந்தச் சிக்கலும் வராது. அன்றாடப் பணிகள் நிறைவேறும். ஆனால், அதற்காக அதிகப்படியாக உழைக்க வேண்டியிருக்கும். பெரியோர் நல்லாசியைப் பெற்று வாருங்கள். தருமப்பணிகளில் ஈடுபட்டு வாருங்கள். உங்களுடைய வாழ்வில் உன்னத நிலை அடையக் கூடிய சந்தர்ப்பங்கள் கனிந்து வரும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு உண்டாகும். பணம் சேரும். பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி வர லாம். அதனால் பயன் உண்டாகவும் வாய்ப்புண்டு. குடும்ப சுபிட் சம் சீராக இருக்கும். செல்வ நிலை, குடும்ப சுபிட்சம், தாம்பத்திய மகிழ்ச்சி எல்லாம் சீராக இருக் கும். கணவன் - மனைவியரிடையே கருத்து வேற்றுமை எழ இடம் தராதீர்கள். பிள்ளைகளை சற்று கவனமுடன் கண்காணிப்பது அவசியம். உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்துக் கண்டிக்க நேரலாம். நண்பர்களில் நல்லவர்களை இனம் கண்டு பழகினால் தொல்லை இல்லை. காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள் ளோர் மிகுந்த எச்சரிக்கையுடன் கடமையாற்ற வேண்டியிருக்கும்.

    குடும்பம்:

    குடும்பத்தைப் பொறுத்தவரை தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத விஷயங்கள் எல்லாம் நடக்க இருக்கிறது. செலவுகள் உங்களை திக்குமுக்காட செய்தாலும் வரக்கூடிய செலவுகள் சுப செலவுகளாக இருக்கும் என்பதில் மகிழ்ச்சி அடையலாம். பிள்ளைகளின் திருமண விஷயத்தில் அலைச்சலும், விரயங்களும் ஏற்படலாம். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருக இருக்கிறது. தொலைந்து போன கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் ஆண்டாக இவ்வாண்டு உங்களுக்கு அமைய இருக்கிறது.

    பொருளாதாரம்:

    பொருளாதார ரீதியான முன்னேற்றம் 2022ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு நல்லவையாக அமைய இருக்கிறது. இதுவரை மந்த நிலையில் இருந்த வருமானம் உங்களுக்கு சுறுசுறுப்பாக இருக்கிறது. செலவுக்கு ஏற்ப வரவும் வரக் கூடிய அற்புத பலன்கள் உண்டு. புதிய ஒப்பந்தங்கள், புதிய வாய்ப்புகள் உங்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தை பெருமளவு கைகொடுக்க இருக்கிறது. செலவுகளை கட்டுக்குள் அடக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பொருளாதாரத்தை ஏற்றத்தில் கொண்டு செல்ல குடும்ப பெண்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதில் பலன் பெறலாம்.

    தொழில்:

    தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்ற வருமானம் ஈட்டக்கூடிய இடங்களில் இருப்பவர்கள் அனுகூலமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்க கூடிய அற்புத ஆண்டாக இவ்வாண்டு அமைய இருக்கிறது. வியாபாரத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் போன்ற விஷயங்களில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். வாடகை இடத்திலிருந்து, சொந்த இடத்திற்கு தொழிலில் மாற்றம் உண்டாக வாய்ப்புகள் அமையும். ஆண்டின் துவக்கத்தில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும், போகப்போக பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைத்து சாதனைகளைப் புரியும் அற்புத ஆண்டாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி, பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

    ஆரோக்கியம்:

    உடல், மனம் ஆகிய விஷயங்களில் சற்று குழப்ப நிலைத் தொடரும். பாத சனி உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் கூடுமானவரை உணவு கட்டுப்பாடு மேற்கொள்ளுங்கள். வெளியில் அதிகம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஜங்க் புட், ஃபாஸ்ட் ஃபுட் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து சத்துள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. மன உளைச்சல், மன இறுக்கம் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நீடிக்கும் என்பதால் இவ்வாண்டில் தியானம், யோகா போன்ற மன அமைதி தரும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது.

    காதல்:

    கணவன், மனைவி இடையே இருக்கும் காதல் மேலும் அதிகரிக்கும். இவ்வாண்டு சாதகமான ஆண்டு என்பதால் திருமண வைபவங்கள் கைகூடி வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு பல எதிர்ப்புகளையும் தாண்டி உங்கள் காதல் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்புகளை பெறுவீர்கள். அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் ஆபத்தை கொடுக்கும் என்பதால் நிதானமாக பெரியவர்களின் ஆசியுடன் எதையும் செய்ய முயற்சிப்பது நல்லது. குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இவ்வாண்டு அற்புதம் நிகழ இருக்கிறது. அமைதியான சூழ்நிலையில் உண்மை நிலை அறிந்து பின்னர் வார்த்தையை உபயோகிப்பது நல்லது.

    பரிகாரம்:

    தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை சுப பலன்கள் அதிகம் காணப்படுவதால் நீங்கள் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு வாருங்கள் நல்லதே நடக்கும். துன்பங்கள் தீர ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கான உதவிகளை செய்து வாருங்கள்.


    தமிழ் காலண்டர்
    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    கௌரி
    பஞ்சாங்கம்
    கிரக ஓரை
    காலம்
    ராகு,குளிகை
    எமகண்டம்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    ஆன்மிக தகவல்கள்
    சுப
    முகூர்த்தம்
    ஆன்மிக
    தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    திருமண
    பொருத்தம்
    ஆன்மிக
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    .
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2022 | Tamil Monthly Calendar 2022 | Tamil Calendar 2022 | Tamil Muhurtham Dates 2022 | Tamil Wedding Dates 2022 | Tamil Festivals 2022 | Nalla Neram 2022 | Amavasai 2022 | Pournami 2022 | Karthigai 2022 | Pradosham 2022 | Ashtami 2022 | Navami 2022 | Karinal 2022 | Daily Rasi Palan |