Home

    பெண்கள் மச்ச பலன்கள் - மச்ச சாஸ்திரம் பெண்களுக்கு - Pengal macha palangal

     பெண்கள் தலையில் மச்சம் :

    தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.


    பெண்கள் வலது கண்ணில் மச்சம் :

    வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.


    பெண்கள் வலது கண்ணின் வெண் படலத்தில் மச்சம்

    வலது கண்ணின் வெண் படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.


    பெண்கள் இடது கண் வெண்படல மச்சம்

    இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.


    பெண்கள் இடது கண்ணின் வலப்புறத்தில் மச்சம்

    இடது கண்ணின் வலப்புறத்தில் மச்சம் உடைய பெண்ணுக்கு சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.


    பெண்கள் இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம்

    இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இவர்களின் வாழ்கையில் உறவினர்கள் நட்பு என்பது எட்டாக்கனி போல் தான் இருக்கும்.இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்


    பெண்கள் இரு கண்கள் வெண்படலம் கீழ் மச்சம்

    இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.


    பெண்கள் இரு கண்கள் வெளிப்புற மச்சம்

    இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர்

    வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.


    பெண்கள் நெற்றியில் மச்சம்

    ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.


    பெண்கள் நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம்

    நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.


    பெண்கள் நெற்றியின் வலப் புறத்தில் மச்சம்

    நெற்றியின் வலப்புறத்தில் கருப்பு மச்சம் இருந்தால் எதிர்பாராத தனயோகம் உண்டாகும். செல்வந்தர் ஆவார்.


    பெண்கள் நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம்

    நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள்.


    பெண்கள் நெற்றியின் இடது புறத்தில் கருப்பாக மச்சம்

    நெற்றியின் இடது புறத்தில் மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.

    பெண்கள் நெற்றி நடுவே மச்சம்

    நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அப்பெண் புகழ், பதவி, அந்தஸ்து சொந்தகாரியாவால்.


    பெண்கள் இரு புருவங்க மத்தியில் மச்சம்

    இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணிற்க்கு தீர்க்க ஆயுள் உண்ட்கும். நல்ல குடும்பம் அமையும்.


    பெண்கள் வலது புருவத்தில் மச்சம்

    வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான கனவன் அமைவார்.


    பெண்கள் இடது புருவத்தில் மச்சம்

    இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்


    பெண்கள் வலது பொட்டில் மச்சம்

    வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.


    பெண்கள் மூக்கில் மச்சம்

    மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.


    பெண்கள் மூக்கின் நுனியில் மச்சம்

    மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.


    பெண்கள் மேல் உதட்டில் மச்சம்

    மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொʊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.


    பெண்கள் மோல் வாயில் மச்சம்

    மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணைகணவராக அடைந்திடுவாள்.


    பெண்கள் கன்னத்தில் மச்சம்

    காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகரமாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.


    பெண்கள் இடது கன்னத்தில் மச்சம்

    இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள்.


    பெண்கள் வலது கன்னத்தில் மச்சம்

    வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் எப்போதும் ஒருவித படபடபுடன் இருப்பார்கள். கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும் சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.


    பெண்கள் கழுத்தில் மச்சம்

    கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் திர்ஷ்டத்தை தேடித் தருவாள்.


    பெண்கள் நெற்றியின் நடுவில் மச்சம்

    நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகார பதவியில் அமர் வாள். ஆடம்பர வாழ்வுகிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும்.


    பெண்கள் இரு புருவத்துக்கிடையே மச்சம்

    இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தாலும் மேற்சொன்ன போலவே அதிகார பதவியில் அமர்வாள். ஆடம்பர வாழ்வுகிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும்.


    பெண்கள் நெற்றியில் வலது பக்கம் மச்சம்

    நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.


    பெண்கள் இடது தாடையில் மச்சம்

    பெண்கள் இடது தாடையில் மச்சம் இருந்தால் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள்.


    பெண்கள் வலது தாடையில் மச்சம்

    வலது தாடையில் மச்சம் பிறரால் வெறுக்கப்படுவாள்.


    பெண்கள் கண்களில் மச்சம்

    கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.


    பெண்கள் மூக்கு மீது மச்சம்

    மூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். செயல்திறன், பொறுமைசாலி ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.


    பெண்கள் மூக்கின் வலதுபுற மச்சம்

    மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.


    பெண்கள் மூக்கின் இடதுபுறம் மச்சம்

    மூக்கு இடதுபுறம் இருந்தால் அப்பெண்கள் கூடா நட்பு, எதையும் நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு சிநேகமும் இவர்களுக்கு இருக்கும். அப்பெண்களால் அவமானம் போன்றவைகள் சந்திக்க நேரிடும்.


    பெண்கள் மூக்கின் நுனியில் மச்சம் 

    மூக்கின் நுனியில் மச்சம் உடைய பெண்களுக்கு வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள் போன்ற நன்மை உண்டாகும். தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்று கர்வமும், பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.


    பெண்கள் மூக்கின் கீழே மச்சம்

    மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.


    பெண்கள் நாசித் துவாரங்களுக்கு மேல் மச்சம்

    நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.


    பெண்கள் காதுகளில் மச்சம்

    காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.


    பெண்கள் மேல், கீழ் உதடுகள் மச்சம்

     உதட்டின் மேல் மற்றும் கீழ் பகுதியில் மச்சம் இருந்தால் அவள் ஒழுக்கம், உயர்ந்த குணம், காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள். இருப்பாள்.


    பெண்கள் மேல் வாய் மச்சம்

    வாயின் மேல் பகுதியில் மச்சம் உடைய பெண்கள் அமைதி, அன்பானகவும் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.


    பெண்கள் மேல் வாயின் இடதுபுற மச்சம்

    மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.


    பெண்கள் மேல் வாய்க்கு அடியில் மச்சம் 

    மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.


    பெண்கள் நாக்கில் மச்சம்

    நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும். பொய் கூறுபவளாக இருப்பார், அவர்கள் வார்த்தைகள் பலிக்கும்.


    பெண்கள் கழுத்தில் மச்சம்

    கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.


    பெண்கள் வலது கழுத்தில் மச்சம் 

    வலது கழுத்தில் மச்சம் உடைய பொண்களுக்கு எளிதில் குழந்தை பாக்கி யோகம் அமையும்


    பெண்கள் இடதுபக்க தோளில் மச்சம்

    இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.


    பெண்கள் இடதுபக்க மார்பில் மச்சம்

    பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம்.


    பெண்கள் வலது பக்க மார்பில் மச்சம்

    வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில்

    போராட்டம் இருக்கும்.


    பெண்கள் நெஞ்சின் இடைப்பகுதியில் மச்சம்

    நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.


    பெண்கள் உள்ளங்கை, முழங்கை மச்சம்

    மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.


    பெண்கள் தொப்புளுக்கு மேலே மச்சம்

    தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.


    பெண்கள் தொப்புளில் மச்சம்

    தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.


    பெண்கள் வயிற்றில் மச்சம்

    வயிற்றில் மச்சம் உடைய பெண்களுக்கு நல்ல குணம், நிறைவான வாழ்க்கை அமையும்


    பெண்கள் அடிவயிற்றில் மச்சம்

    அடிவயிற்றில் மச்சம் உடைய பெண்களுக்கு ராஜயோக அம்சம், உயர்பதவிகள் போன்றவைகள் எளிதில் கிடைக்கும்


    பெண்கள் முதுகில் மச்சம்

    முதுகில் மச்சம் கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில்

    ஆரோக்கியம் திகழும்.


    பெண்கள் பிறப்புறுப்பில் மச்சம் 

    பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.நிறைவான போக சுகம் தருபவள்.


    பெண்கள் இடதுதொடையில் மச்சம்

    இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷ்டப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள். வாழ்வில் ஏற்ற இரக்கங்கள் இருந்து கொண்டுதான் இருக்கும்.


    பெண்கள் வலது தொடையில் மச்சம் 

    வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும். ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை போன்றவைகள் உங்களுடைய குணமாக அமையும். இதனால் உங்கள் நட்புக்கள் விலகும்.


    பெண்கள் புட்டங்களில் மச்சம்

    பொண்களின் புட்டங்கள் மீது மச்சம் இருந்தால் சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை, வெற்றி உண்டாகும்.


    பெண்கள் இடது முழங்காலில் மச்சம்

    இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி.


    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    ஆன்மிக தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    திருமண
    பொருத்தம்
    பிறந்த நாள்
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2023 | Tamil Monthly Calendar 2023 | Tamil Calendar 2023 | Tamil Muhurtham Dates 2023 | Tamil Wedding Dates 2023 | Tamil Festivals 2023 | Nalla Neram 2023 | Amavasai 2023 | Pournami 2023 | Karthigai 2023 | Pradosham 2023 | Ashtami 2023 | Navami 2023 | Karinal 2023 | Daily Rasi Palan |