Home

    Gowri Panjangam 2022 - கௌரி பஞ்சாங்கம் 2022

    கௌரி பஞ்சாங்கம் 2022

    கௌரி பஞ்சாங்கம் :

    ஒரு நாளில் நன்மை தரும் நேரம், தீமை செய்யும் நேரம் என்று இருகின்றது. நன்மை தரும் நேரங்களை தெரிந்து கொண்டு அந்த சமயங்களில் சுப காரியங்களை செய்தால் வெற்றி கிட்டும். தீமை செய்யும் நேரங்களை தெரிந்து கொண்டால் அந்த சமயங்களில் சுப காரியங்கள் செய்வதை தவிர்த்து விடலாம்

    நன்மை தரும் நேரம், தீமை செய்யும் நேரம் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை தரும் அட்டவணை கௌரி பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகின்றது.

    அதில் ஒரு நாள் என்பது பதினாறு முகூர்த்தங்களாகப் பிரிக்கப் பட்டிருகின்றது. ஒரு முகூர்த்தம் நடைபெறும் நடைபெறும் காலம் மூன்றே முக்கால் நாழிகை. அதாவது ஒன்றரை மணிநேரம் ஆகும். முதல் முகூர்த்தம் என்பது சூரியன் உதயமாவதிலிருந்து ஆரம்பம் ஆகின்றது.

    இனி ஒவ்வொரு கிழமையிலும் அதன் பதினாறு முகூர்தங்களும் எப்படி பட்டவையாக இருக்கின்றனதென்று கொடுத்துள்ள அட்டவணையில் நீங்கள் பார்க்கலாம்.

    இலாபம், அமிர்தம், சுகம், தனம், உத்தியோகம் ஆகியவை சுப முகூர்தங்களாகும். விஷம், ரோகம், சோரம் ஆகியவை அசுப முகூர்தங்களாகும்.

    இலாபம் :

    இந்த சுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். எல்லாம் லாபகரமாக முடியும்.

    அமிர்தம் :

    இந்த சுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். மகிழ்ச்சிகரமான தகவல்கள் கிட்டும்.

    சுகம் :

    இந்த சுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் சுப காரியங்கள், முக்கிய காரியங்கள் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். நோயாளிகள் மருந்து சாப்பிட்டால் உடனே நோய் குணமாகும்.

    தனம் :

    இந்த சுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் தொழில் அல்லது வியாபாரம் செய்தால் சிறப்பான நன்மைகள் கிட்டும். நல்ல லாபமும் கிட்டும்.

    உத்தியோகம் :

    இந்த சுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் உத்தியோகம் சம்மந்தப்பட்ட காரியங்கள், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு சம்மந்தப்பட்ட முயற்சிகள் செய்தால் வெற்றி கிட்டும்.

    விஷம் :

    இந்த அசுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் எந்த காரியத்தை தொடங்கினாலும் தோல்வி தான் கிட்டும். தேவையற்ற விவகாரங்களும், விரோதங்களும் ஏற்படும்.

    சோரம் :

    இந்த அசுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் எந்த காரியத்தை செய்தாலும் எதாவது தடை ஏற்பட்டு நின்று போகும். பொருள்கள் அல்லது பணம் களவாடப்படும்.

    ரோகம் :

    இந்த அசுப முகூர்தம் நடைபெறும் நேரங்களில் எந்த சுப காரியத்தையும் செய்யக் கூடாது. நோயாளிகள் மருந்து சாப்பிட்டால் நோய் அதிகமாகும். விரைவில் குணமாகாது.

    இந்த கெளரி நல்ல நேரத்தோடு, ஓரையும், பஞ்சபட்சியும் அறிந்து செயல்படுவோருக்கு வெற்றி நிச்சயம். பஞ்சபட்சி பற்றி அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.

    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    Baby
    Names
    வாஸ்து
    தகவல்
    பிறந்த நாள்
    பலன்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    அரசு
    விடுமுறை
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    திருமண
    பொருத்தம்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள் கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்

Tamil Daily Calendar 2024 | Tamil Monthly Calendar 2024 | Tamil Calendar 2024 | Tamil Muhurtham Dates 2024 | Tamil Wedding Dates 2024 | Tamil Festivals 2024 | Nalla Neram 2024 | Amavasai 2024 | Pournami 2024 | Karthigai 2024 | Pradosham 2024 | Ashtami 2024 | Navami 2024 | Karinal 2024 | Daily Rasi Palan |