தாரா பலன் என்றால் என்ன ? |
தாரா பலன் என்றால் என்ன ?
தாரா, தாரை போன்றவைகள்
என்ன வென்று முதலில் பார்ப்போம் ..இவைகள் நட்சத்திரங்களின் குறி ஈடாகவே ஜோதிட வேதம் சொல்கிறது .
ஒருவர் பிறக்கும் பொழுது சந்திரன் இருக்கும் 12 ராசிகளில் எந்த நட்சத்திரத்தில்
இருக்கிறதோ அதுவே அவரின் ஜென்ம ராசி ஜென்ம நட்சத்திரம் ஆகும் , .
ஒரு ஜாதகரின் வேலை,
வியாபாரம், தொழில் தொடக்கம், புதிய முயற்சிகள்
போன்ற நிகழ்வுகள் துவங்கும் நாளில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறது
என்பதை பார்க்க வேண்டும் அந்த நட்சத்திரமாவது அவரின் ஜென்ம நட்சத்திர அடிப்படையில்
சாதகமாக அல்லது பாதகமாக இருக்கிறது என்பதை முன் கூட்டியே
அறிவது நலம்
ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில்
இருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ண வரும் எண் 1,2,3,4,5,6,7,8, 9 வரை உள்ள எங்களுக்கு பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது , 9க்கு மேல் வந்தால் 9ல் வகுக்க வரும்
மீதியை கொண்டு பலன்களை காண வேண்டும்.