கருப்பன் |
சந்தண அபிஷேகம் செய்யும் போது சந்தோஷத்தை கொடுக்க வருபவனும்
குங்குமம் அபிஷேகம் செய்யும் போது குடும்பத்தை காக்க வருபவனும்
விபூதி அபிஷேகம் செய்யும் போது வீரத்தை கொடுக்க வருபவனும்
சாம்பிராணி புகை காண்ம்பிக்க போதும் சங்கடத்தை போக்க வருபவனும்
பத்தியின் மனதுக்கு எங்களுக்கு நல்ல புத்தியே கொடுக்க வருபவனும்
கற்பூரம் காண்ம்பிக்கும் போது கஷ்டத்தை போக்க வருபவனும்
பன்னீர் அபிஷேம் பன்னும் போது பாசம் காட்ட வருபவனும்
தேன் அபிஷேகம் செய்யும் போது தேடி வந்து காக்க வருபவனும்
பால் அபிஷேகம் செய்யும் போது பால் போல் குணம் கொண்டு பல்லாக்கு குதிரையில் வருபவனும்
தயிர் அபிஷேகம் செய்யும் போது தர தரவேன ஓடி வந்து காக்க வருபவனும்
இளநீர் அபிஷேகம் செய்யும் போது இளமனசுடன் வருபவனும்
பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யும் போது பஞ்சத்தை போக்க வருபவனும்
பணுகு அபிஷேகம் செய்யும் போது புண்பட்டதை போக்க வருபவனும்
தண்ணீர் அபிஷேகம் செய்யும் போது தண்ணீர் பஞ்சத்தை போக்க வருபவனும்
தேங்காய் உடைத்தவுடனும் தோழ் கொடுக்க வருபவனும்
சுருட்டு வாடையே கண்டவுடனும் சூரவாளி போல் வருபவனும்
சாராய பாட்டிலே திறந்தவுடன் தான் பக்தர்களுக்கு சாதனையே கொடுக்க வருபவனும்
வாழைப்பழம் வைக்கும் போது வாழையடி வாழையாக வாழ வைக்க வருபவனும்
பூமாலை போட்டு அழைக்கும் போதும் பூ போல பாதுகாக்க வருபவனும்
வெள்ளைகுதிரையின் வேங்கை போல வருபவனும்
வேட்டை நாயுடனும் வலம் வருபவனும்
வேல்கம்புடனும் வேட்டையாடா வருபவனும்
கோணகொண்டை அழகுடன் இருப்பவனும்
வீச்சருவா வீரனாக இருப்பவனும்
சலங்கை கட்டி ஆடுபவனும்
இடுப்பில் சூரா கத்தியுடனும்
ஆணி பாதம் அனிந்து கரடு முரடு என பாராமல் வந்து காப்பவனும்
ஆயிரம் தெய்வங்கள் துணை வந்தாலும் நமது கருப்பனின் பாசனத்திற்கு அளவே இல்லை
கருப்பனின் பாசத்தை அதை அளந்து பார்க்காதை
கருப்பனின் பாசத்தை அளந்து பார்க்கத்தான் அந்த கடலும் பத்தாதே
இத்தனைக்கும் சொந்தகாரன் நமது நமது கருப்பன் நம்மளை காக்க இந்த பிரபஞ்சத்தில் நம்மளை காக்கவே ஓடோடி வருபவனும் நாம் கருப்பன் ஒருவரே