மூட்டு வலி பிரச்னை |
40 வயதை கடந்து விட்டாலே மூட்டு வலி ஏற்படும் என்பதெல்லாம் அந்த காலங்க. இப்போதெல்லாம் இளம் வயதுள்ளவர்களுக்கும் மூட்டு வலி பிரச்னை ஏற்படுகிறது.
மூட்டு வலி, மூட்டு அழற்சி (Osteo Arthritist), முடக்கு வாதம் (Rheimatoid Arthristis) என்று இரு வகைப்படுகிறது.
மூட்டு அழற்சி, பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படுகிறது. இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.
முடக்கு வாதம், எந்த வயதினருக்கும் வரலாம். இது பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.
மூட்டு வலி அவதியைக் குறைக்க உதவும் சில இயற்கை மருத்துவ முறைகளைப் பற்றி இங்கு காண்போம்.
நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி, ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
புதிய உருளைக்கிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு நல்ல மருந்தாகும்.
ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால்கோப்பை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்