பொருட்கள் கனவு பலன்கள் |
பொருட்கள் கனவு பலன்கள் :
- அரிசி மூட்டையை கனவில் கண்டால் நல்ல லாபமும் தொழிலில் விருத்தியும் ஏற்படும்
- அம்பு எய்வது போல கனவு வந்தால் நல்ல செய்தி வரப்போகிறது என்று அர்த்தம்.
- அணிகலன்கள் வாங்குவது போல கனவு வந்தால் இன்பம் உண்டாகும் சந்தோஷம் அதிகரிக்கும்
- இரும்பை கனவில் கண்டால் நஷ்டம் ஏற்படும்.
- இரும்பை உடைப்பது போல் கனவு வந்தால் பல நாட்களாக இருந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் என்று அர்த்தம்.ஆனால் வெற்றி உங்கள் பக்கம்.
- இறைச்சியைக் கொண்டு செல்வது போல் கனவு கண்டால் உங்களுக்கு பெரும் புகழ் வர போகிறது என்றும் அதன் மூலமாக செல்வமும் சேரப் போகிறது என்று அர்த்தம்.
- உடைந்த கண்ணாடியை கனவில் கண்டால் உங்கள் உடன் இருப்பவர்களை நீங்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று அர்த்தம் அதை கொஞ்சம் மாற்றிக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும்.udukkai கà¯à®•ான பட à®®à¯à®Ÿà®¿à®µà¯
- உடுக்கையை கனவில் கண்டால் தனக்கு ஏற்படும் ஆபத்தை உடன் இருக்கும் நண்பர்கள் காப்பாற்றுவார்கள் என்று அர்த்தம்.
- உப்பை கனவில் கண்டால் நல்ல தனலாபம் ஏற்படும்.
- இறைச்சியை விற்பனை செய்வதை கனவில் கண்டால் எதிர்பாராத தனலாபம் ஏற்படும் என்பதை குறிக்கும்.
- எண்ணெய் தேய்த்து குளிப்பது போல் கனவு வந்தால் உடல் வலிமை குறைவு ஏற்படும் என்பது அர்த்தம்.
- ஏணி மேல் ஏறுவது போல் கனவு வந்தால் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும்
- ஏணி இருந்து கீழே இறங்குவது போல் கனவு கண்டால் செய்யும் தொழிலில் நட்டம் ஏற்படும் என்பதை குறிக்கும்.
- புல்லாங்குழல் கனவில் வந்தால் உங்கள் மனது உறுதியற்றதாக இருக்கிறது என்று அர்த்தம்.
- மேஜையை கனவில் கண்டால் ஒரு வழக்கு முடிவுக்கு வரும் உங்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு ஏற்படும் என்பதை குறிக்கும்.
- கத்தியை கனவில் கண்டால் உங்கள் நண்பர்களிடம் நீங்கள் எதிராக நடந்து கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தம் அப்படி நடந்து கொள்ளாமல் இருப்பதற்கு இது அறிவுறுத்தி செல்கிறது.
- பணிகளை கனவில் காண்பது மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
- காற்றாடி பலூன் போன்றவற்றை கனவில் கண்டால் வீண் விரயம் கட்டாயம் உருவாகும் என்பதை குறிக்கும்.புது முயற்சியில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
- கிரீடத்தை கனவில் கண்டால் உங்களுக்கு மதிப்பு மரியாதை அந்தஸ்து செல்வம் ஆகியவை உயரப் போகின்றது என்று அர்த்தம்.
- கிழிந்த துணியை கனவில் கண்டால் நீங்கள் செய்யும் காரியம் சீக்கிரமாக நடைபெறும்.விடாமுயற்சியுடன் இருப்பீர்கள் இதனால் புது வரவும் வெற்றியும் கிடைக்கப் பெறும்.கிழிந்த துணியை தைப்பது போல கனவு கண்டால் புகழ் செல்வம் உண்டாகும்.
- குங்குமத்தை கனவில் கண்டால் மங்களகரமான நிகழ்ச்சி நடைபெறும்.
- குடையை கனவில் கண்டால் பாதுகாப்பான வாழ்க்கை சூழலை அமையப் போகின்றது என்று அர்த்தம்.
- சங்கை கனவில் கண்டால் துன்பங்கள் நீங்கி சுகவாழ்வு ஏற்பட போகின்றது என்று அர்த்தம்.
- சந்தனத்தை கனவில் கண்டால் உங்களுக்கு புகழும் கௌரவமும் கிடைக்கப் போகிறது அது கிடைப்பதற்கான வாய்ப்பை நீங்கள் இன்னும் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பதே.
- சாவியை கனவில் கண்டால் திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.
- சிலையை கனவில் பார்த்தால் புகழ் உண்டாகும் என்பதை குறிக்கும்