விருட்ச சாஸ்திரம் உங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்


    விருட்ச சாஸ்திரம் சுருக்கமாக
    உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

    மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.

    அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

    நட்சத்திரம்:
    * அஸ்வதி ஈட்டி மரம்
    * பரணி நெல்லி மரம்
    * கார்த்திகை அத்திமரம்
    * ரோகிணி நாவல்மரம்
    * மிருகசீரிடம் கருங்காலி மரம்
    * திருவாதிரை செங்கருங்காலி மரம்
    * புனர்பூசம் மூங்கில் மரம்
    * பூசம் அரசமரம்
    * ஆயில்யம் புன்னை மரம்
    * மகம் ஆலமரம்
    * பூரம் பலா மரம்
    * உத்திரம் அலரி மரம்
    * அஸ்தம் அத்தி மரம்
    * சித்திரை வில்வ மரம்
    * சுவாதி மருத மரம்
    * விசாகம் விலா மரம்
    * அனுஷம் மகிழ மரம்
    * கேட்டை பராய் மரம்
    * மூலம் மராமரம்
    * பூராடம் வஞ்சி மரம்
    * உத்திராடம் பலா மரம்
    * திருவோணம் எருக்க மரம்
    * அவிட்டம் வன்னி மரம்
    * சதயம் கடம்பு மரம்
    * பூரட்டாதி தேமமரம்
    * உத்திரட்டாதி வேம்பு மரம்
    * ரேவதி இலுப்பை மரம்

    ராசிகள்
    * மேஷம் செஞ்சந்தனம் மரம்
    * ரிஷபம் அத்தி மரம்
    * மிதுனம் பலா மரம்
    * கடகம் புரசு மரம்
    * சிம்மம் குங்குமப்பூ மரம்
    * கன்னி மா மரம்
    * துலாம் மகிழ மரம்
    * விருச்சிகம் கருங்காலி மரம்
    * தனுசு அரச மரம்
    * மகரம் ஈட்டி மரம்
    * கும்பம் வன்னி மரம்
    * மீனம் புன்னை மரம்

    அவரவர் ராசி நட்சத்திரத்திற்கும் உண்டான விருட்சங்களை தன் நட்சத்திரம் வரும் நாளில் கோவிலில் அல்லது வீட்டு தோட்டங்களில் தன் கைப்பட நட்டு வணங்கி வளர்த்து வர பலவித கர்ம தோஷங்கள் குறைந்து நன்மைகள் அதிகமாகும்.

    ஒவ்வொரு கிரகத்திற்கும் 1008 வகையான ஜீவ(உயிருள்ள) மூலிகைகள் சித்தர் நூலில் சொல்லப்பட்டுள்ளது இருப்பினும் உதாரணத்திற்காக ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒன்பது வகையான ஜீவ மூலிகைகளின் விவரங்களை மட்டும் இப்பொழுது காண்போம்.

    ரவிவிருட்சம், சங்கரவிருட்சம், அலரிவேம்பு, அண்டவிருட்சம், வேங்கைக்கரணி, தேவருத்திரவிருட்சம், வெள்ளெருக்கு, செந்நாவல் மற்றும் சூரியபாணம் போன்ற மூலிகைகள் சூரியபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

    வெண்வேம்பு, சுந்தரிகற்பம், நாதவிருட்சம், வெள்ளவுரி, துர்க்கைக்கரணி, வெண்நாவல், வெண்வேம்பு, வெண்புங்கன் மற்றும் வெண்முருக்கு போன்ற மூலிகைகள் சந்திரபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

    சத்தியகரணை, வேல்விருட்சம், கஸ்தூரிவிருட்சம், செவ்வவுரி, ஞானக்கரணி, மகாவில்வம், செம்மாவிருட்சம், கருங்காலிவிருட்சம் மற்றும் செண்பகவிருட்சம் போன்ற மூலிகைகள் செவ்வாய் பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

    நாராயணவிருட்சம், கோதண்டவிருட்சம், கருநெல்லி, மறைமூலி, பூதக்கரணி, கருநாயுருவி, கருந்துளசி, கருணைவிருட்சம் மற்றும் சங்குவிருட்சம் போன்ற மூலிகைகள் புதபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

    பொற்சீந்தில், கயல்விருட்சம், வேதச்சாரளை, உண்ணாவிருட்சம், சித்தர்கற்பம், திருநீற்றுப்பத்
    திரி, அரசவிருட்சம், முல்லைவிருட்சம் மற்றும் வித்யாவிருட்சம் போன்ற மூலிகைகள் குருபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

    சக்திவிருட்சம், மோகினிவிருட்சம், காமவிருட்சம், போகவிருட்சம், ஆசனவிருட்சம், அத்திவிருட்சம், சந்தனவிருட்சம், வெண்டாமரைமூலி மற்றும் காமாட்சிவிருட்சம் போன்ற மூலிகைகள் சுக்கிரபகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

    நீலவேம்பு, அஞ்சனைவிருட்சம், கரும்புங்கன், இரும்புக்கொடி, அரனார்விருட்சம், வன்னிவிருட்சம், மகிழம்விருட்சம், கருங்குவளை விருட்சம் மற்றும் மந்தாரை விருட்சம் போன்ற மூலிகைகள் சனி பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

    கறுஞ்சீந்தில், கார்கோடகவிருட்சம், கல்லரவுவிருட்சம், பணிக்கொடி, மகாவல்லாரை, மருதவிருட்சம், கடம்புவிருட்சம், அறுகுவிருட்சம் மற்றும் மோட்சவிருட்சம் போன்ற மூலிகைகள் ராகுபவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.

    பிரம்மவிருட்சம், ஞானிவிருட்சம், கோதைவிருட்சம், எழில்விளம்பிவிருட்சம், மதியூக்கி, தேவதர்ப்பை, பஞ்சாட்சரமூலி, யோகவிருட்சம் மற்றும் செம்பணி விருட்சம் போன்ற மூலிகைகள் கேது பகவானுக்குரிய அபூர்வ மூலிகைகளாகும்.தனித்தனியாக ஒவ்வொரு மரத்திலும் செய்த அஞ்சனம் மை உள்ளது. தனித்தனியாக ஒவ்வொரு மரத்திலும் எடுத்த புல்லுருவி கொண்டு என்ன காரியம் என்றாலும் உலகத்தில் சாதிக்கலாம்..

    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    ஆன்மிக தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    திருமண
    பொருத்தம்
    பிறந்த நாள்
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2023 | Tamil Monthly Calendar 2023 | Tamil Calendar 2023 | Tamil Muhurtham Dates 2023 | Tamil Wedding Dates 2023 | Tamil Festivals 2023 | Nalla Neram 2023 | Amavasai 2023 | Pournami 2023 | Karthigai 2023 | Pradosham 2023 | Ashtami 2023 | Navami 2023 | Karinal 2023 | Daily Rasi Palan |