குறள் 23 - Kural 23 / நீத்தார் பெருமை |
குறள் எண்: 23
அதிகாரம் :
நீத்தார் பெருமை (Neeththaar Perumai - The Greatness of Ascetics)
குறள் பால்:
அறத்துப்பால் (Araththuppaal - Virtue)
குறள் இயல் :
பாயிரவியல் (Paayiraviyal - Prologue)
குறள் :
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
குறள் விளக்கம்:
சாலமன் பாப்பையா :
இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது
மு.வ :
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது
Transliteration:
Irumai Vakaidherindhu Eentuaram Poontaar Perumai Pirangitru Ulaku
couplet::
Their greatness earth transcends, who, way of both worlds weighed,In this world take their stand, in virtue's robe arrayed
translation:
No lustre can with theirs compare Who know the right and virtue wear
explanation:
The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others).