பஞ்சாங்கம் என்றால் என்ன? |
• பஞ்சாங்கம் என்பது வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும்.
அவை :
வாரம் :
ஞாயிறு முதல் சனி வரையான கிழமைகள் 7-யை குறிக்கும்.
நட்சத்திரம் :
அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள்.
திதி :
ஒரு வானியல் கணக்கீடாகும். வானில் சு+ரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள தொலைவாகும்.
யோகம் :
வானில், குறித்த இடத்திலிருந்து சு+ரியனும், சந்திரனும் செல்லுகிற மொத்த தொலைவாகும்.
கரணம் :
திதியில் பாதியாகும்.
• பஞ்சாங்களில் வருடம் மற்றும் மாதங்கள் இரண்டு வேறுபட்ட முறைப்படி கணக்கிடப்படுகின்றன.
சௌரமான முறை
இம்முறை சு+ரியனின் இயக்கத்தை அடைப்படையாக கொண்டு கணக்கிடும் முறை. இதிலும் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு. அவை : 1 சௌர வருஷ முறை 2 சாயன வருஷ முறை
சந்திரமான முறை
சந்திரனின் இயக்கத்தை அடைப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறை. சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன்பு வரும் பூர்வபக்ஷ பிரதமை திதி தொடங்கி அடுத்த சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன் வரும் அமாவாசை முடியவுள்ள ஒரு ஆண்டு காலத்தைக் குறிப்பது சந்திரமான முறை எனப்படும். இம்முறையில் ஒரு வருடம் என்பது சுமார் 354 நாட்கள் கொண்டது.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.