குளிகை நேரம் என்றால் என்ன? |
குளிகை நேரம் என்றால் என்ன?
தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகை நேரம் வந்தது எப்படி?
பொதுவாக ஜோதிடப்படி, ராகுகாலம், எமகண்டத்தில் எந்தவொரு நல்ல செயலை செய்யமாட்டார்கள். ஆனால், குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்த காரியமும் திரும்பத் திரும்ப நடக்கும். ஆகையால், நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், ஈமச்சடங்கு போன்ற கெட்ட காரியங்களுக்கு குளிகை நேரம் பொருத்தமில்லாததாகவும் கருதப்படுகிறது. குளிகை நேரத்தில் ஒரு காரியத்தை தொடங்கினால், அது வளர்ந்துக்கொண்டே இருக்கும்.
குளிகை நேரம் என்றால் என்ன? யார் அந்த குளிகன் என்பதை பற்றி பார்ப்போம்.
குளிகையில் என்ன செய்யலாம்?
• குளிகை நேரத்தில் சொத்து வாங்குவது
• சுப நிகழ்வுகள்
• கடனை திருப்பி கொடுப்பது
• பிறந்தநாள் கொண்டாடுவது
போன்றவற்றை செய்வதால் அச்செயல்கள் எந்த தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டும் இருக்கும்.
குளிகையில் என்ன செய்யக்கூடாது?
• அடகுவைப்பது
• கடன் வாங்குவது
• வீட்டை காலிசெய்வது
• இறந்தவர் உடலை கொண்டு செல்வது
போன்ற விஷயங்களை குளிகை நேரத்தில் செய்யக்கூடாது.
நல்ல காரியங்களை செய்வதற்கு உகந்த குளிகை நேரத்திற்குரிய குளிகனின் பிறப்பே ஒரு நல்ல நிகழ்வை தொடங்குவதற்காகத்தான் உருவானது.