2022 புத்தாண்டு விருச்சிகம் ராசி பலன்கள் - New Year Rasi Palan Viruchigam 2022 |
விருச்சிக ராசி அன்பர்களே
இந்த ஆண்டு பல நன்மைகள் விளையக்கூடிய நேரம் இது. தகுதி வாய்ந்தவர்கள் பாராட்டப்படுவார்கள். உங்களுடைய ஆதாயமான நிலைக்கு அடிகோலும் விதமாக சில காரியங்கள் நடக்கும். புதிய சகவாசத்தை புறக்கணியுங்கள், செல்வாக்கு அதிகமாகும். செல்வம் சேரும். பழைய பாக்கி வசூலாகும். குடும்பத்தில் திருமணம், மகப் பேறு போன்ற பாக்கியங்கள் ஏற்படலாம். பதவி உயர்வு கிட்டும். உடல் நலனை கவனிக்கவும். குடும்பநலம், தாம்பத்திய சுகம் எல்லாம் சீராக அமையும். வெளிப்படையாகவும் உண்மையாகவும் நடந்து கொண்டால் நலம் பெருகும். தப்பித் தவறியும் தவறான செய்கைக்கு இடம் கொடுத்தால் இழிநிலை உண்டாகும். கடன் தொல்லை இருக்கு மாதலால் சமாதானமுறையில் பேசிச் சமாளிக்க வேண்டியது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு முன்விரோதம் காரணமாக ஒரு சச்சரவு உண்டாகலாம். அதை பொறுமையுடன் சமாளித்தால் வெற்றி நிச்சயம். விரும்பிய பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். கவலை வேண்டாம். முதலாளி - தொழிலாளி உறவு அன்புடன் விளங்கும்.
குடும்பம்:
குடும்பத்தைப் பொறுத்தவரை விருச்சிக ராசி காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கொடுக்க இருக்கிறது. குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு குருவின் அருளால் நிச்சயம் புத்திர பாக்கியம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகளை ஓரளவுக்கு பேசி தீர்த்து புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். புதிய வீடு கட்ட நினைப்பவர்கள் என் கனவு நனவாகும். பிள்ளைகளிடம் இருந்து வந்த குறைகள் படிப்படியாக நீங்குவதை காணலாம். பிள்ளைகளின் திருமண விஷயங்களில் பெற்றோர்களுக்கு நிறைவு உண்டாகும் இனிய ஆண்டாக இருக்கிறது.
பொருளாதாரம்:
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கிறது. பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். 2022ஆம் ஆண்டு குருவின் அருளால் உங்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதகமான பலன்களை காணலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குவிக்கும் யோகம் உண்டு. சரியான திட்டமிடலுடன் பணத்தை செலவிடுவது இன்னும் உங்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும்.
தொழில்:
தொழில், வியாபாரம், உத்தியோகம் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமான வருடமாக அமைய இருக்கிறது. 2022ஆம் ஆண்டில் உத்தியோகஸ்தர்கள் தங்களுக்கென தனி மரியாதையை உருவாக்கிக் கொள்வீர்கள். சமூகத்தில் உங்களுடைய அந்தஸ்து அதிகரிக்கும். புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி நல்ல நிலைக்கு செல்ல திட்டமிடுவீர்கள். ஆண்டின் பிற்பகுதி சாதகமாக அமையும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் தங்களுடைய அனுபவத்தை பயன்படுத்தி அதற்கேற்ப வருமானத்தை எப்படி அதிகரிக்கலாம் என்கிற முனைப்புடன் இருப்பீர்கள். உங்கள் எண்ணங்கள் அத்தனையும் பலிக்கக்கூடிய வகையில் கிரக அமைப்புகள் இருப்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய முதலீடு செய்வதில் கவனத்துடன் இருப்பது நல்லது. துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை இன்றி புதிய முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது உத்தமம். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு படிப்படியாக முன்னேற்ற நிலை உண்டாகும்.
ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஓரளவுக்கு சுமாரான பலன்கள் உண்டு. அடிக்கடி உடல் நிலையில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பெரிதாக எந்த பாதிப்புகளும் உண்டாகாது. உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை கடைபிடித்து வந்தால் ஆரோக்கியம் சீராக இருக்கும். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் தவிர்த்து, எலும்பை வலுவாக்க கூடிய ஆரோக்கியம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.
காதல்:
கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் புரிதல் அதிகரிக்கும். புதிதாக திருமணமானவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது. திருமணமாகாத நபர்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் உங்கள் காதல் கனவுகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டாலும் ஒருவரை ஒருவர் எங்கும் விட்டுக் கொடுக்காது நடந்து கொண்டால் இந்த ஆண்டு உங்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக மாறும்.
பரிகாரம்:
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை நல்ல ஒரு அதிர்ஷ்டம் தரும் ஆண்டாக இந்த ஆண்டு இருந்தாலும், தேவையற்ற தடைகளை நீக்க வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வாருங்கள். மேலும் வியாழன் கிழமையில் குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபட்டு வந்தால் தடைப்பட்ட சுபகாரியங்கள் நடக்கும். குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் நீங்க பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெற்றோர்களுக்கு உதவி புரியுங்கள்.