2022 புத்தாண்டு மீனம் ராசி பலன்கள் | New Year Rasi Palan Meenam 2022 |
மீன ராசி அன்பர்களே
இந்த ஆண்டு காதல் விவகாரங்களில் தீவிரம் ஏற்படுமானாலும் அதனைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. குடும்ப நலம் பாதிக்கப்படாது. சில நன்மைகள் உண்டாகும். பொதுவாக அந்தஸ்துக்கு ஊறு நேராது. முயற்சிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள். படிப்பில் அதிக ஈடுபாடு காட்டுவது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். அன்றாடப் பணிகள் சரிவர நடக்கத் தடையில்லை. பொருளாதார நிலையில் சரிவும் உண்டு; சமாளிக்கக்கூடிய நிலையும் உண்டு. பல அரிய காரியங்களைச் செய்து பயனடையக்கூடிய வாய்ப்பும் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இதனால் வேலைச் சூழல் நிம்மதியானதாக அமையும். சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு உங்களின் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் இருக்கும். சக தொழிளாலர்களின் ஆதரவு உங்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும். உயர் அதிகாரிகளும் உங்களிடம் நெருக்கத்துடன் பழகி உங்களை பாராட்டுவார்கள்
குடும்பம்:
குடும்பத்தைப் பொறுத்தவரை மீன ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டு. ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் சூழ்நிலை ஏற்படலாம். குடும்பத்தின் பொருளாதார உயர்வை முன்னிறுத்தி சில தியாகங்களை செய்ய வேண்டி வரும். பல கடினமான சந்தர்ப்பங்களை நீங்கள் எதிர்கொண்டாலும் உங்களை ஊக்குவிக்க குடும்பத்தினரின் ஆதரவு நிச்சயம் இருக்கும். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் மனம் தளராமல் இருப்பது நல்லது. தேவையற்ற கோபதாபங்களை தவிர்த்து. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது உத்தமம். மாணவர்கள் கல்வியில் உயர்வடைய விடாமுயற்ச்சி தேவை.
பொருளாதாரம்:
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை மீன ராசிக்காரர்களுக்கு ஆண்டின் முற்பகுதியில் சிறப்பாக அமைந்திருந்தாலும், போகப்போக அனுகூலமற்ற பலன்களை கொடுக்கும் என்பதால் உங்கள் உழைப்பை இரட்டிப்பாக்க வேண்டிய தருணமாக இருக்கும். தீராத உழைப்பின் மூலம் சாதிக்க வேண்டிய ஆண்டாக இவ்வாண்டு அமைய இருப்பதால் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது உத்தமம்.
தொழில்:
தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். இவ்வருடம் முழுவதும் உங்களுக்கு தேவையான விஷயங்கள் கடினமான போராட்டத்திற்கு பிறகே கிடைக்கும். இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களுடைய பொறுமையை நீங்கள் இழக்காமல் இருப்பதால் பல்வேறு நலன்களை அடையலாம் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இடமாற்றம், பணிமாற்றம் போன்ற விஷயங்களில் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஆண்டின் நடுப்பகுதியில் புதிய விஷயங்களை செயல்படுத்துவதில் லாபம் அதிகரிக்கும். ஆண்டின் துவக்கத்தில் அதிக தொகையை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. நேர்மையான அணுகுமுறை உங்களை உயர்வடையச் செய்யும் எனவே குறுக்கு வழியை பயன்படுத்த வேண்டாம்.
ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மீன ராசிக்காரர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் அலட்சியம் காண்பித்தால் தேவையற்ற வீண் விரயங்களை சந்திக்க நேரும் என்பதால் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. பிள்ளைகளின் ஆரோக்கியத்திலும் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது உத்தமம். மன உளைச்சலில் இருப்பவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
காதல்:
மீன ராசிக்காரர்களுக்கு 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் காதல் விவகாரத்தில் அனுகூலமற்ற பலன்கள் இருந்தாலும் படிப்படியாக நல்லதொரு முன்னேற்றம் காணலாம். கணவன் மனைவிக்குள் தேவையற்ற சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும். ஆண்டின் பிற்பகுதியில் உங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். திருமணமான புதிய தம்பதிகளுக்கு குழந்தை பேரில் சாதகப் பலன்கள் உண்டு. பல வருடமாக குழந்தை இல்லாதவர்களுக்கும் இவ்வாண்டு நல்ல செய்தி காத்திருக்கிறது. திருமணமாகாதவர்களுக்கு சில தடைகளை தாண்டிய வெற்றியைக் காணும் யோகம் உண்டு என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. மனதிற்கு பிடித்தவர்களை பெற்றோர்களுடைய சம்மதத்துடன் திருமணம் முடிப்பீர்கள்.
பரிகாரம்:
மீன ராசிக்காரர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஏற்ற இறக்கமான பலன்களை கொடுக்க இருப்பதால் வியாழக்கிழமையில் குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வருவது நல்லது. சோமவார விரதம் இருப்பவர்களுக்கு தீராத பிணி எல்லாம் தீரும். நினைத்தது நடக்க உங்களால் முடிந்த அளவிற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி புரிவது நல்லது.