2022 புத்தாண்டு மகரம் ராசி பலன்கள் | New Year Rasi Palan Makaram 2022 |
மகர ராசி அன்பர்களே
இந்த ஆண்டு உங்களுடைய கௌரவத்திற்கு ஊறு நேராது. அன்றாடப் பணிகளில் தொய்வு உண்டாகாது. கடுமையாக உழைக்க வேண்டி வரும். அதனால் பயனும் உண்டாகும். நண்பர்களிடமோ. தொழில் சம்பந்தப்பட்ட வகையிலோ, வியாபார ரீதியாகவோ யாரிடமும் தகராறு வரும்படி நடந்து கொள்ளாதீர்கள். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். பொருளாதார நிலை பாதிக்கப்படாது. கணவன்- மனைவி உறவு களிப்புடன் விளங்கும். உறவினர்களால் ஏற்படும் தொல்லைகளில் ஒரு கட்டுப்பாடு இருக்க இடமுண்டு. பொதுவாக நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. குறிப்பாக புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் அப்படி நடந்து கொள்ள முடியாதபடி நிலைமை உருவாகலாம். எச்சரிக்கை.
குடும்பம்:
குடும்பத்தைப் பொறுத்தவரை மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உருவாக இருக்கிறது. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து இணக்கமாக செல்லும் வாய்ப்புகளை கொடுக்கிறது. சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் உங்களுடைய முயற்சிகளுக்கு ஊக்குவிப்பார்கள். பெற்றோர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பிள்ளைகளின் எதிர்கால திட்டமிடல் சாதகப் பலனை கொடுக்கும். மாணவர்கள் தங்களுடைய கல்வியில் சிறப்பான முன்னேற்றம் பெற கூடுதல் ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது.
பொருளாதாரம்:
பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட கடந்த ஆண்டு முடிய இருக்கிறது. 2022ஆம் ஆண்டில் பொருளாதாரம் கணிசமாக உயர ஆரம்பிக்கும். புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு உண்டாகும். எவ்வளவு செலவுகள் வந்தாலும், அதனை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வரவும் உண்டு. புதிய முதலீடுகளை தவிர்த்து சேமிப்பை அதிகப்படுத்துவது நல்லது. வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் வாங்குவது, விற்பது போன்ற விஷயங்களில் சாதக பலன் கிடைக்கும்.
தொழில்:
தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் இருப்பவர்கள் எதிர்பாராத லாபத்தை காண இருக்கிறீர்கள். இதுவரை இழப்புகளை சந்தித்து கொண்டு இருந்த உங்கள் ராசிக்கு இனி வரும் காலங்களில் புதிய யுக்திகளை கையாள்வதன் மூலம் நல்லதொரு மாற்றத்தை உண்டாக்கும். தொழில் ரீதியான இட மாற்றம் குறித்த விஷயங்களில் திட்டமிட்டு செயலாற்றுவது நல்லது. கைதேர்ந்த நிபுணர்களின் ஆலோசனையோடு புதிய தொழில் துவங்குபவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் பெறுவதில் தொடர் போராட்டம் நீடிக்கும்.
ஆரோக்கியம்:
மகர ராசிக்காரர்களுக்கு 2022ஆம் ஆண்டு ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் படிப்படியாக குறையத் துவங்கும். வெளியிட பயணங்களின் பொழுது கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம் உங்களுடைய உடல் நலம் தேறக் கூடும். மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க சூடான வார்த்தைகளை பிரயோகிப்பதில் கவனம் செலுத்துங்கள்.
காதல்:
கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் ஊடல்கள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை மேலோங்கி காணப்படக் கூடிய அற்புதமான ஆண்டாக இவ்வாண்டு அமைய இருக்கிறது. திருமணமான புதிய தம்பதிகளுக்கு இல்லற வாழ்க்கை இனிமையாக அமைய சுக்கிரன் அருள் உண்டு. விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பரஸ்பர அன்பை நிலைநாட்டி கொள்ளுங்கள். தேவையற்ற சந்தேகங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் பாக்கியம் உண்டு.
பரிகாரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஏற்ற இறக்கமான சுமுகமான ஒரு பலன்களை கொடுக்க இருக்கிறது என்பதால் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்லும் பொழுது விளக்கு ஒன்றை புதிதாக வாங்கி அதில் நெய் விட்டு தீபம் ஏற்றி வைத்து வாருங்கள். தடைகள் நீங்கி வெற்றி பெறுவதற்கு முச்சந்தி பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பது சிறப்பு! மேலும் உங்கள் ராசிக்கு நீர் தானம், நீர்மோர் தானம் போன்ற குளிர்ச்சியான விஷயங்களை தானம் கொடுத்து வருவது வெற்றியை அடைய செய்யும்.