Home

    கனவு பலன்கள்

                                   ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்  போதுதான் கனவுகள் வருகிறது,  இருப்பினும் எல்லா கனவுகளும் மறுநாள் ஞாபகம் இருப்பதில்லை, ஒரு சில கனவுகள் மட்டும் நிஜத்தில் நடந்தது போலவே மனதில் பதிந்திருக்கும்,

                                   சிலர் கனவுகள் வருவது நமது ஆள் மனதில் புதைந்து கிடைக்கும் நினைவுகள்தான் கனவுகளாக வருவதாக கூறுகின்றனர், ஆனாலும் நாம் காணும் கனவுளுக்கு பொருள் இருக்கிறதா என்று கேட்டால் ஆம் என்றுதான் சொல்லவேண்டும் கனவுகள் எப்பவும் நேரடியான அர்த்தத்தை கொடுப்பதில்லை அது மறைமுகமாக எதையோ நமக்கு வெளிப்படுத்துகிறது என்றே சொல்லவேண்டும். 

    எந்த நேரத்தில் கனவுகண்டால் பலிக்கும்  :

                பகலில் கனவுகள் கண்டால் பலிக்காது என்று பொதுவாகசொல்லப்படுகிறது  அதேபோல நள்ளிரவில் கனவுகண்டால் பலிக்கும் என்றும் கூறப்படுகிறது

    நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை காணும் கனவு 1 மாதத்திலும் 2 மணி தொடக்கம் அதிகாலை 3.30 மணிவரை காணும் கனவு 10 நாளிலும், அதிகாலை 3.30 மணி தொடக்கம் 6 மணிவரை காணும் கனவுகள் உடனடியாக அல்லது அடுத்த சில தினங்களுக்குள் பலிக்கும் எனவும் பஞ்சாங்க சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன 


    ஒரு சில கனவுகள் பொதுவாக எல்லோருக்கும் வருவதாக சொல்லபடுக்குறது. எப்படிப்பட்ட கனவுகள் பொதுவாக நமக்கு வருகிறது என பார்க்கலாம் 


    பொதுவாக வரக்கூடிய கனவுகள் 


    விழுவது போன்ற கனவு 

    பள்ளத்தில் இருந்து விழுவதுபோல, உயரமான மலையின்மேல் இருந்து விழுவதுபோல, மரத்தில் இருந்து விழுவது போல, யாரோ தள்ளிவிடுவதுபோல, உயரமான கட்டிடங்கள் போன்றவற்றில் இருந்து விழுவதுபோல பொதுவாக எல்லோருக்கும் ஏற்படுகிறது 


    இப்படி காணும் கனவிற்கு அர்த்தம் என்னவென்றால், உங்கள் வாழ்க்கையில் குழப்பமான சூழ்நிலையில் நீங்கள் பயணித்துக்கொண்டிருப்பதனால்தான் இப்படியான கனவுகள் ஏற்படுகிறது அதாவது நீங்கள் வேலைசெய்யும் இடத்தில் பிரச்சனையோடு இருக்கலாம், சிலருக்கு காதல் வாழ்க்கையில் குழப்பமான நிலைமை, காதலில் தோல்வியடைந்து இருக்கலாம், குடும்பத்தில் பிரச்சனையோடு இருந்தாலும் இப்படியான கனவுகள் வரலாம். 


    இப்படியான கனவுகள் வரும்போது அமைதியாக நிதானமாக உங்கள் பிரச்சனையை கையளவேண்டியது அவசியம் 


    நிர்வாணமாக இருப்பதுபோன்ற கனவு   

    நீங்கள் ஆடையில்லாமல் நிர்வாணமாக வெளியே பயணிப்பது, வேலைக்கு செல்வது போன்ற இப்படியான கனவுகள் வருவதற்கு காரணம், உங்களின் மேல் உங்களுக்கு தன்னம்பிக்கை  இல்லாமல் பொது இடத்தில் பேசுவதற்கு கூச்சப்படுபவராக இருப்பீர்கள், சமூகத்தில் உங்கள் கருத்தை முன்வைக்க தயங்குபவராக இருப்பீர்கள். இது என்னால் முடியுமா? என்ற கேள்வியை நீங்களே அடிக்கடி கேட்பீர்கள்.

    சிறிய விஷயத்தை கூட பெரிதாக நினைத்து மனம்வருந்தும் ஒரு நபராக இருப்பதனால் தான் இப்படியான கனவுகள் ஏற்படுகிறது 


    பற்கள் விழுவது போன்ற கனவு  

    இப்படி கனவு வர காரணம் உங்களது அழகை நினைத்து நீங்கள் அதிக கவலை கொள்ளுவதினால் ஏற்படுகிறது. நல்ல கவர்ச்சியான தோற்றம் என்னிடம் இல்லை என்று கவலை கொள்பவராக இருக்கலாம் அல்லது மற்றவர்களிடம் அழகாகவும் கவர்ச்சியாகவும் பேசமுடியாவிலேயே என்று கவலைப்படுபவராக இருக்கலாம் 

    இப்படியான கனவுகாண்பவர்கள் உங்களுக்கு சுயமாக எந்த முடிவும் எடுக்கும் தைரியமில்லாமல் தயங்கலாம், துணிவு இல்லாமல் மற்றவர்களை நம்பி இருக்கலாம், இதைத்தான் மறைமுகமாக பற்கள் விழுவது போன்ற கனவு உணர்த்துகிறது 

    இப்படி கனவு வந்தால் உங்கள் ஆளுமை மற்றும் துணிவை வளர்த்துக்கொள்ளவேண்டும். யாரையும் சாராமல் சுயமாக நிதானமாக முடிவெடுக்கும் திறனை தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும்

    மரணம் ஏற்படுவது போன்று கனவு 

    இவ்வகையான கனவுகள் பொதுவாக எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும் நண்பரோ அல்லது உறவினரோ யாரோ ஒருவர் இறப்பது போன்ற கனவு இது நமக்கு உறக்கத்தில் கூட கவலையையும் பயத்தையும் ஏற்படுத்தும்

    உங்களுக்கு பிடித்த ஒருவரை பிரிந்தோ அல்லது உங்கள் குடும்பத்தை பிரிந்து தூரத்தில் வாழும்போது இப்படியான கனவுகள் ஏற்படும். மரணம் நிகழுவது போன்று கனவு காண்பது மறைமுகமாக உங்கள் ஆழ்மனதில் உள்ள ஏக்கம் பிரிவினால் வந்த ஏக்கத்தினால் ஏற்படலாம் 


    பரீட்சை எழுதுவது போன்ற கனவு வருவது 

    பாடசாலைக்கு செல்லும்போது பரீட்சை  மண்டபத்தில் தனித்து விடப்பட்டதுபோல அல்லது பரிட்ச்சை வினாத்தாள் கிடைக்காமல் இருப்பதுபோன்று அல்லது பரீட்சை எழுத பேனா கொண்டுசெல்லாமல் சென்ரதுபோல கனவு வருவது 

    நீங்கள் அதிகமாக மனா உளைச்சலினால் பாதிக்கப்படு இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது, உங்களுக்கு எதோ ஒரு காரியத்தினால் மனஅழுத்தம் ஏற்பட்டு அதை எதிர்கொள்ள முடியாமல் தயங்குதல், எந்த வேளையிலும் ஆர்வமில்லாமல் இருப்பது, சவால்களை எதிர்கொள்ள தயக்கம் அல்லது பயம் இதனால்தான் பரீட்சை எழுத்துவதுபோல கனவு வருகிறது 


    பறப்பது போன்று கனவு ஏற்படுவது 

    இது எல்லோருக்கும் ஏற்படும் கனவுகளில் ஒன்றுதான். இது மனநிறைவுடன் சந்தோசமாக இருக்கும் போது  ஏற்படலாம். ஒரு இறுக்கமான மனநிலையில் இருந்து விடுபடும்போது பறப்பது போன்ற கனவுகள் ஏற்படும்.

    வெகுநாளாக மனஇறுக்கத்தில் இருந்து விடுபட்டாலும் இப்படியான கனவுகள் ஏற்படலாம். இவர்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் எல்லாமே முடிந்தது என்பதைத்தான் பறப்பது போன்ற கனவு மறைமுகமாக வெளிப்படுத்துகிறது  

    இன்னும் சில 

    பெரிய பதவியில் இருப்பவர்கள் கனவில் வந்தால் - சமூகத்தில் மதிப்பு ஏற்படும் 

    திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண் பெரிய பதவியில் இருப்பவர்களை கனவில் கண்டால் - பெரிய இடத்தில் சம்மந்தம் அமையப்போகிறது 

    அரச குடும்பத்துடன் பழகுவதுபோல் கனவுகண்டால் - பண உதவி கிடைக்கும் 

    தேவதையை கனவில் கண்டால் - அதிஷ்டம் கிடைக்கப்போவதாக அர்த்தம் 

    அழகில்லாத பெண்ணை மணமாகாத ஆண் கனவில் கண்டால் - மிகவிரைவில் அழகான மனைவி அமையப்போகிறது என்று அர்த்தம் 

    அதிசமமான அல்லது வினோதமான  பொருட்களை கனவில் கண்டால் - நம்பினவரால் ஏமாற்றப்படலாம் 

    கை கலகலப்பு , அடிதடி, சண்டை சச்சரவு போன்றவை ஏற்படுவதுபோல கனவுகண்டால் - வாழ்க்கை அமைதியாக, எல்லோருடனும் சுமுக உறவுடன் இருப்பீர்கள் 

    யாரோ ஒருவர் உங்களுக்கு அடிப்பது போன்று கனவுகண்டால் - உங்களுக்கு விரோதிகள் இல்லை என்று அர்த்தம் 

    நீங்கள் பிறரை அடிப்பதுபோல கனவுகண்டால் - புதிய நண்பர்கள் உருவாக்கலாம், 

    நீங்கள் அடிபட்டு அல்லது விபத்தில் சிக்கி இரத்தம் வருவதை கண்டால் - பொருள் அவிவிருத்தி, வாழ்க்கையில் நல்ல விடயம் நடக்கப்போகிறது என்று அர்த்தம் 

    கத்தியால் குத்துவது போன்ற கனவுகண்டால் - உங்கள் மீது வீண் பலி வந்து சேரும் 

    அழுது புலம்புவதுபோல கனவுகண்டால் - உங்களுக்கு புதிய பிரச்சனைகள் ஏற்படப்போகிறது என்று அர்த்தம் 

    உங்களுக்கு பயம், பிரச்சனை ஏற்படுவது போல கனவு கண்டால் - வாழ்க்கை நிம்மதியாக இருப்பதாக அர்த்தம் 

    பிறர் ஆபத்தில் மாட்டிருப்பது போல கனவுகண்டால் - நண்பர்களால் தொந்தரவு ஏற்படலாம் 

    அரிசியை கனவில் கண்டால் - தொழில் விருத்தி அடையும், அதிக இலாபம் கிடைக்கலாம் 

    ஆண்களின் கனவில் கருப்பு நிற அன்னப்பறவை வந்தால்  - அவர்களுக்கு பெரும் ஏமாற்றம் வந்துசேரும் 

    வெள்ளைநிற அன்னப்பறவை கனவில் வந்தால் - வாழ்க்கை சந்தோசமாய் இருக்கும் 

    கற்பித்த ஆசானை கனவில் கண்டால் - வாழ்க்கை அமோகமாக இருக்கப்போகிறது என்று அருத்தம் 

    ஆலமரத்தை கனவில் கண்டால் - உங்கள் தொழில் பன்மடங்கு வளர்ச்சியடையப்போவதாக அர்த்தம் 

    வயதில் மூத்தவர்கள் , பெரியார்கள் வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வதை போல கனவு வந்தால் - உங்கள் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் 

    நீங்கள் மெலிந்து விட்டதாக கனவு வந்தால் - குடும்ப நிலை மேம்படும் 

    இரும்பை கனவில் கண்டால் - உங்கள் மன வலிமை இரும்பை போல இருக்கும் 

    அலுவலகத்தில் பணியாற்றுவது போல கனவுகண்டால் - நல்லகாலம் விரைவில் வரப்போகிறது என்று அர்த்தம் 

    வேலையை இழந்துவிட்டதுபோல கனவுகண்டால் - வேளையில் ஏதாவது சிக்கல் ஏற்படலாம் அல்லது வேலை பறி போகலாம் 

     தொழில் செய்வதில் பிரச்சனை ஏற்படுவதுபோல கனவுகண்டால் - சொந்த தொழிலில் புதிய பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம் 

    விவசாயம் செய்வதுபோல கனவு வருவது - வாழ்க்கை செழிப்பானதாக மாறும் 

    கோவில் தோரணம் கனவில் வருதல் - உறவினர் ஒருவர் இறக்கப்போகிறார் என்று அர்த்தம் 

    மீனை கனவில் கண்டால் - வீடிட்ற்கு புதியவர் வரப்போகிறார் என்று அர்த்தம் 

    நீங்கள் மட்டும் தனியாக சாப்பிடுவதுபோல் கனவு வந்தால் - துன்பங்கள் ஏற்படப்போகிறது , தொழிலில் நஷ்டம் ஏற்படப்போகிறது என்று அர்த்தம் 

    விருந்து சாப்பிடுவது போல கனவு வருதல் - பதவி உயர்வு 

    திருமணமாகாதவர் விருந்து சாப்பிடுதல் - விரைவில் திருமணம் 

    திருமணமானவர் விருந்து சாப்பிடுதல் - குழந்தை பாக்கியம் 

    நீர் ஊற்று அல்லது கிணற்றை கனவில் கண்டால் - வாழ்வில் துன்பம் ஏற்படாது 

    எதிரியை கனவில் கண்டால் - கவனமாக இருக்கவேண்டும், எதிரிகளால் ஆபத்து 

    கனவில் எலும்பை கண்டால் - வாழ்க்கை சந்தோசம், மகிழ்ச்சி வந்துசேரும் 

    மனிதர்களில் எலும்பை கனவில் கண்டால் - பரம்பரை சொத்து வந்துசேரும் 

    பேனாவை கையில் கண்டால் - கடிதம் மூலம் வரவு கிடைக்கப்போகிறது 

    வெள்ளை காகிதத்தை கனவில் கண்டால் - துக்க செய்தி 

    அதிக கூட்டத்தை கனவில் கண்டால் - இறப்பு 

    கடிதம் எழுதிக்கொண்டிருப்பதுபோன்ற கனவு - நல்லசெய்தி வரப்போகிறது 

    எண்ணெய் தேய்த்து குளிப்பது போன்ற கனவு - கனவு கண்டவர் விரைவில் நோயினால் பாதிக்கப்படப்போகிறார் 

    நீங்கள் திடீரென ஏழையாகி விட்டது போல கனவுகண்டால் - எதிர்பாராத வகையில் அதிஷ்டம் வந்து சேரும், செல்வம் கிட்டி உயர்ந்த நிலைக்கு செல்வர் 

    நீங்கள் ஏமாற்றப்படுவது போல கனவு வந்தால் - தீமைகள் வந்து சேரும்


    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    ஆன்மிக தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    திருமண
    பொருத்தம்
    பிறந்த நாள்
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2023 | Tamil Monthly Calendar 2023 | Tamil Calendar 2023 | Tamil Muhurtham Dates 2023 | Tamil Wedding Dates 2023 | Tamil Festivals 2023 | Nalla Neram 2023 | Amavasai 2023 | Pournami 2023 | Karthigai 2023 | Pradosham 2023 | Ashtami 2023 | Navami 2023 | Karinal 2023 | Daily Rasi Palan |