Home

    கிரகப் பிரவேசம் செய்ய ஏற்ற நாட்கள்

    கிரகப் பிரவேசம் செய்ய ஏற்ற நாட்கள் :

                         வீடு கட்டுவதற்கு எவ்வளவு முக்கியதுவம் கொடுக்கிறோமோ அதே அளவு கிரகப் பிரவேசம் செய்யும் நளை தேர்ந்தெடுக்க கொடுக்கப்பட வேண்டும்.

                       கிரகப் பிரவேசம் செய்வதற்கு ஏற்ற மாதங்கள், நட்கள், திதி, நட்சத்திரங்கள் மற்றும் லக்கனம் அகியவற்றை அறிந்து கிரகப் பிரவேசம் செய்யும் முடிவு செய்ய வேண்டும்.

    கிரகப்பிரவேசம் செய்ய ஏற்ற மாதங்கள்

     •  சித்திரை 

     •  வைகாசி 

     •  ஐப்பசி  

     •  கார்த்திகை 

     •  தை

    இந்த மாதங்களில் மட்டுமே கிரகப்பிரவேசம் செய்ய ஏற்ற மாதங்கள்.  

    கிரகப்பிரவேசம் செய்ய ஏற்ற நாட்கள்  :

     •  திங்கட்கிழமை   

     •  புதன்கிழமை  

     •  வியாழக்கிழமை 

     •  வெள்ளிக்கிழமை.

    கிரகப்பிரவேசம் செய்ய ஏற்ற நட்சத்திரங்கள் :

     •  அசுவினி 

     •  ரோகினி 

     •  மிருகசீரிடம் 

     •  புனர்பூசம்  

     •  பூசம் 

     •  மகம் 

     •  உத்திராடம்  

     •  உத்திரட்டாதி  

     •  அஸ்வதம் 

     •  சுவாதி  

     •  அனுஷம்  

     •  மூலம் 

     •  திருவோணம்  

     •  அவிட்டம்  

     •  சதயம்  

     •  ரேவதி  

    கிரகப்பிரவேசம் செய்ய ஏற்ற லக்னங்கள்  

     •  ரிஷபம்  

     •  மிதுனம்  

     •  கன்னி 

     •  விருச்சகம்  

     •  கும்பம்

              இவ்வாறு பொருத்தமான மாதம், கிழமை, திதி, நட்சத்திரம், லக்னம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து கிரகப்பிரவேசம் செய்தால் அங்கு வாழ்பவன் குபேர சம்பத்தையும் சிறப்பான உடல் ஆரோக்கியத்தையும் பெற்று வாழ்வான்.

    கிரகப்பிரவேசம் செய்யும் முறை :

            பொதுவாக கிரகப்பிரவேச ஹோமத்தை அதிகாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள்ளும், லக்ன முகூர்த்தங்களான 6.00 முதல் 7.00 ஆகிய நேரங்களில் செய்வதே உத்தமமாகும். 9 மணிக்கு மேல் நல்ல நேரமாக இருந்தாலும் கிரகப்பிரவேசம் செய்யாமல் தவிர்ப்பது நல்லது.கிரகப்பிரவேச மனையில் அமரும் கணவன்-மனைவி ஆடம்பரமான உடைகளை அணியாமல் பாரம்பரிய வேட்டி, சேலை அணியலாம்.கிரகப்பிரவேசம் செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். கிரகபிரவேச சடங்குகளை பதற்றப்படாமல் ஒன்றன் பின் ஒன்றாகச் செய்ய வேண்டும். கிரகப்பிரவேச பூஜை செய்ய வரும் அர்ச்சகருக்குப் பூஜைக்கு வாங்கிவைத்த பொருட்கள் அனைத்தையும் கொடுக்க வேண்டும். அவர் விநாயகர் பூஜை, லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை என வரிசையாக ஹோமம் செய்து கலச தண்ணீரை வீடு முழுவதும் தெளிப்பார்.

              வீடு கட்டும் காலத்தில் மற்றவர்களது கண்ணேறுகள் தோஷங்கள் அகல்வதற்காக தெய்வங்கள், மகரிஷிகள், தேவர்கள் இடமாகக் கொண்டுள்ள தெய்வப் பசுவை வாசலில் கோபூஜை செய்து மங்கள வாத்தியம் வேத கோஷங்கள் முழங்க அழைத்து வர வேண்டும்.கோ பூஜை செய்யும் போது கணவன் மனைவி இருவரும் பசுவின் அங்கங்களுக்கு பொட்டு வைத்து அதன் கன்றிருக்கும் பொருட்டு வைத்து துணி, மாலை சாற்றி அரிசி, வெல்லம் கலந்த கலவை மற்றும் அகத்தி கீரையை அந்த பசுமாடுக்கு உண்ணுபதற்குக் கொடுக்க வேண்டும். சகல தெய்வங்களையும் தீர்த்தங்களையும் உடலுள் வைத்துக் கொண்டு லட்சுமி அருளையும், சகல ஐஸ்வர்யங்களையும் பேர் அருளாய்ச் சுரக்கும் உன்னை அன்னையாகத் துதிக்கிறேன் என்று வரவேற்க வேண்டும். இதனால் வீட்டில் அனைத்து தெய்வ - தேவ வாழ்த்துக்களும் கிடைக்கும்.

             அதன்பின் சுபமுகூர்த்த நேரம் முடியும் முன்பாக அடுப்பில் ஒரு புதிய பாத்திரம் வாங்கி, அதற்கு பூ, மஞ்சள், குங்குமம் வைத்து பசும்பால் ஊற்றிக் காய்ச்ச வேண்டும். பால் நன்றாக பொங்கவிட வேண்டும். அதை டம்ளரில் ஊற்றி சாமிக்கு வைத்து நிவேதனம் செய்து ஆர்த்தி காட்ட வேண்டும். மறக்காமல் வீட்டில் உள்ள கதவுகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, மாவிலை, தோரணம் கட்ட வேண்டும்.

    கிரகப்பிரவேசம் செய்யக்கூடாத மாதங்கள் 

    ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி மாதங்களில், வீடு கட்டி கிரகப்பிரவேசம் அல்லது கட்டிய வீட்டைப் புதிதாக வாங்கி கிரகப்பிரவேசம் என எதையும் செய்யக்கூடாது என்கிறது ஜோதிட சாஸ்திரம்

    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    Baby
    Names
    வாஸ்து
    தகவல்
    பிறந்த நாள்
    பலன்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    அரசு
    விடுமுறை
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    திருமண
    பொருத்தம்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள் கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்

Tamil Daily Calendar 2024 | Tamil Monthly Calendar 2024 | Tamil Calendar 2024 | Tamil Muhurtham Dates 2024 | Tamil Wedding Dates 2024 | Tamil Festivals 2024 | Nalla Neram 2024 | Amavasai 2024 | Pournami 2024 | Karthigai 2024 | Pradosham 2024 | Ashtami 2024 | Navami 2024 | Karinal 2024 | Daily Rasi Palan |