இராசி அதிபதிப் பொருத்தம் |
கணவன் மற்றும் மனைவி அவர்களுக்காக செய்யும் காரியசித்திக்கு உதவும்.
பனிரெண்டு ராசிகட்கு அதிபதி உண்டு. அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையால் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. பெண்ணின் ராசி அதிபத, ஆணின் ராசி அதிபதிக்கு பகை என்று உறவு எனில் மட்டுமே பொருத்தமில்லை. நட்பு, சமம் எனில் பொருத்தம் உண்டு.
கிரகங்களின் நட்பு, சமம், பகை விவரம்.
கிரகங்கள் |
நட்பு |
சமம் |
பகை |
சூரியன் |
செவ்வாய், சந்திரன், வியாழன் |
புதன் |
சுக்கிரன், சனி |
சந்திரன் |
சூரியன், புதன் |
செவ்வாய், வியாழன், சுக்கிரன், சனி |
- |
செவ்வாய் |
சந்திரன், சூரியன், வியாழன் |
சுக்கிரன், சனி |
புதன் |
வியாழன் |
செவ்வாய், சூரியன், சந்திரன் |
சனி |
சுக்கிரன், புதன் |
சுக்கிரன் |
புதன், சனி |
செவ்வாய், வியாழன் |
சூரியன், சந்திரன் |
புதன் |
சூரியன், சுக்கிரன் |
செவ்வாய், வியாழன், சனி |
சந்திரன் |
சனி |
சுக்கிரன், புதன் |
வியாழன் |
செவ்வாய், சூரியன், சந்திரன் |
திருமணப் பொருத்தம் பார்க்கும் போது ராகு, கேது இவர்களூக்கு எந்த இராசி வீடும் கிடையாது.