காகம் கரையும் பலன்கள்

    காகம் கரையும் பலன்கள்

    காகம் கரைவதை வைத்து பலரும் சகுனம் பார்ப்பது உண்டு. அந்த வகையில் காகம் குறைவதால் ஒருவருக்கு ஏற்படும் பலன்களை பற்றி இங்கு விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

    பயணம் இனிதாகும் :

    பயணத்தின்போது காகம் வலமிருந்து இடம் போவது தன லாபத்தையும், இடமிருந்து வலம் போவது தன நஷ்டத்தையும் உண்டாக்கும்

     பயணிக்கும் அன்பரை நோக்கிக் காகம் கரைந்துகொண்டே பறந்து வந்தால், பயணத்தைத் தவிர்த்துவிட வேண்டும். 

    ஒரு காகம் மற்றொரு காகத்துக்கு உணவூட்டும் காட்சி தென்படுமானால், பயணம் இனிதாகும். 

    ஆணும் பெண்ணுமாய் காகங்கள் இருந்து கரைந்துகொண்டிருந்தால், பெண்கள் சேர்க்கை ஏற்படும்.ஆண் குழந்தை பிறக்கும்!

    பூக்கள், பழங்கள் அல்லது ரத்தினக் கற்களை ஒரு வீட்டில் காகம் இட, அந்த வீட்டில் ஆண் குழந்தை பிறக்கும். 

    கூடு கட்ட உபயோகிக்கும் புல், குச்சி போன்றவற்றைக் கொண்டு போட்டால், பெண்மகவு பிறக்கும். 

    மணல், நெல் போன்ற தானிய வகைகள், ஈரமான மண், பூக்கள், காய்கனிகள் கொண்டு வந்து வீட்டில் போட்டால், அந்தந்தப் பொருளின் வகையில் லாபம் ஏற்படும். 

    வீட்டிலுள்ள பாத்திரங்களைக் காகம் எடுத்துப் போவது நன்மையன்று.- 

    சூரியனைப் பார்த்து காகம் கரைந்தாலும், சிவந்த பொருட்கள், சிவந்த மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து வீட்டினுள் போட்டாலும், நெருப்பினால் துன்பம் நேரிடும். 

    காகம் மிகவும் அமைதியாக உட்கார்ந்து கிழக்கு திசை பார்த்துக் கரைந்தால் அரசாங்க ஆதரவு, நண்பர் சேர்க்கை, தங்கத்தால் லாபம், நல்ல உணவு கிடைக்கும்.

    பெருமழை பெய்யுமா?

    பால் உள்ள மரங்கள் மற்றும் ஆற்றங்கரை களில் இருந்துகொண்டு மழைக்காலங்களில் காகம் கரைவது, நல்ல மழை உண்டு என்பதற்கான சகுனம். மற்ற காலங்களில் இவ்வாறு காகம் கரைந்தால், மழை மேகங்கள் மட்டுமே வந்துபோகும்; மழை வராது நீர் நிலைகளைப் பார்த்துக் காகம் கரைவதும், மணல் புழுதி அல்லது 

    தண்ணீரில் காகம் தன் தலையை மூழ்கச் செய்வதும் நல்ல மழைக்கான அறிகுறிகளாகும். 

    மற்ற காலங்களில் இவ்வாறு செய்வது தீது!திசைக்கு ஏற்ப காகம் கரையும்

     பலன்கள்தென்கிழக்கு: 

    இந்தத் திசை நோக்கிக் காகம் கரைந்தால், தங்கம் சேரும்.

    தெற்கு: 

    உளுந்து, கொள்ளு போன்ற தானிய லாபமும், இசை யில் புலமையும் அமையும். சங்கீத வித்வானின் நட்பு கிடைக்கும்.

    தென்மேற்கு: 

    நல்ல தகவல் வரும். குதிரை, தயிர், எண்ணெய், உணவு போன்றவை சேரும்.

    மேற்கு: 

    மாமிச உணவு, மது வகைகள், நெல் முதலான தானியங் கள், முத்து, பவளம் போன்று கடலில் விளையும் பொருட்கள், உலர்ந்த பழ வகைகள் கிடைக்கும்.

    வடமேற்கு: 

    ஆயுதங்கள், கொடியில் விளையும் பழங்கள், கிடைக்கும். உலோகங்களால் லாபம் ஏற்படும்.

    வடக்கு: 

    ஆடைகள், நல்ல உணவு ஆகியன கிடைக்கும். வாகனங்கள் சேரும்.

    வடகிழக்கு: 

    நல்ல தின்பண்டங்கள், பொதி சுமக்கும் எருது, பொதி சுமக்கும் வாகனங்கள் சேரும். வீட்டின் கூரை மீது அமர்ந்துகாகம் கரைந்தால், மேற்கூறிய அனைத்தும் சேரும்.


    தமிழ் காலண்டர்
    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    கௌரி
    பஞ்சாங்கம்
    கிரக ஓரை
    காலம்
    ராகு,குளிகை
    எமகண்டம்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    ஆன்மிக தகவல்கள்
    சுப
    முகூர்த்தம்
    ஆன்மிக
    தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    திருமண
    பொருத்தம்
    ஆன்மிக
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    .
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2022 | Tamil Monthly Calendar 2022 | Tamil Calendar 2022 | Tamil Muhurtham Dates 2022 | Tamil Wedding Dates 2022 | Tamil Festivals 2022 | Nalla Neram 2022 | Amavasai 2022 | Pournami 2022 | Karthigai 2022 | Pradosham 2022 | Ashtami 2022 | Navami 2022 | Karinal 2022 | Daily Rasi Palan |