Home

    இந்துக்கள் கூட அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் !..

    இந்துக்கள் கூட அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் !..

    1. ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.

    2. திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.

    3. தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.

    4. தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.

    5. கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.

    6. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.

    7. சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )

    8. சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.

    9. திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.

    10. செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.

    11. வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையான வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.

    12. ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.

    13. ஈரோடு காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.

    14. மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.

    15. திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.

    16. சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

    17. சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.

    18. தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.

    19. தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.

    20. குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.

    21. தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.

    22. தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக நிற்கிறது.!

    23. விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.

    24. திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும் சுடுவதில்லை.

    25. சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.

    27. திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

    28. ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

    29. திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.

    30. காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.

    31. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.

    32. திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

    33. திருக்கழுக்குன்றத்தில் தெப்பக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெறுகிறது.

    34. திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.

    35. சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்துவிடுகிறது.

    36. நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது. 

    வாழ்க வளமுடன்...

    பல இந்துக்கள் கூட அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்!.

    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    Baby
    Names
    வாஸ்து
    தகவல்
    பிறந்த நாள்
    பலன்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    அரசு
    விடுமுறை
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    திருமண
    பொருத்தம்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள் கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்

Tamil Daily Calendar 2024 | Tamil Monthly Calendar 2024 | Tamil Calendar 2024 | Tamil Muhurtham Dates 2024 | Tamil Wedding Dates 2024 | Tamil Festivals 2024 | Nalla Neram 2024 | Amavasai 2024 | Pournami 2024 | Karthigai 2024 | Pradosham 2024 | Ashtami 2024 | Navami 2024 | Karinal 2024 | Daily Rasi Palan |