மனிதர்கள் கனவு பலன்கள்

    மனிதர்கள் கனவு பலன்கள் :

    1.  அழகிய பதுமையை(பெண்) கனவில் காண்பது வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படுவதை குறிக்கிறது.
    2. மங்கள பொருளுடன் கன்னிப் பெண் வீட்டிற்குள் நுழைவது வீட்டில் உள்ள பெண் பருவமடைய போகிறார்கள் அல்லது திருமண முயற்சி கைக்கூடும்.
    3. அறிமுகமில்லாதவர்கள் மற்றும் புதிய நபர்களை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
    4. அணைக்கட்டில் நீர் வழிந்தோடுவது போல் கனவு வருவது வரவுக்கு மீறிய செலவு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
    5. அணை உடைவது போல் கனவு கண்டால் நெருங்கிய நண்பர்களிடமிருந்து பிரிந்து செல்லுதல் மற்றும் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறிக்கிறது.
    6. ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவது போல் கனவு கண்டால் செல்வந்தரின் தொடர்பு ஏற்படும்.
    7. அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் உண்டாகும்.
    8. அட்டைப்பூச்சியை கனவில் கண்டால் சத்ருக்களால் பிரச்சனைகள் உருவாகும் என்பதைக் குறிக்கிறது.
    9. அம்மை நோயால் கொப்பளம் உண்டாகுவது போல் கனவு கண்டால் தனலாபம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
    10. அரிசி நிறைந்த கூடையை கனவில் காணுதல் நன்மை உண்டாகும்.
    11. அணிகலன்கள் வாங்குவது போல் கனவு வந்தால் இன்பம் பயக்கும்.
    12. அத்தி மரத்தை காண்பது குடும்பத்தில் விவாக நிகழ்வு ஏற்படுவதை குறிக்கும்.
    13. ஆலயத்தை கனவில் கண்டால் இறைவனின் அருளால் நமக்கு கூடிய விரைவில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.
    14. ஆலயத்தில் நாம் தனியாக இருந்து கதவு மூடப்பட்டது போல் கனவு காண்பது தொழிலில் தேக்க நிலைகள் ஏற்படும்.
    15. ஆலயத்தின் தலை வாசலை நாம் திறந்து உள்ளே போவது போல் கனவு வருவது புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள் என்பதை குறிக்கும்.
    16. ஆடுகளைக் கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.
    17. ஆமையை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் என்பதைக் குறிக்கிறது.
    18. ஆயுதம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை கனவில் கண்டால் துன்பம் நீங்கும்.
    19. இனிமையான பாடலை கேட்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கும்.
    20. இரும்பை கனவில் காண்பது நஷ்டத்தை குறிக்கிறது.
    21. இருளைக் காண்பது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
    22. இறந்தவர்களை கனவில் கண்டால் சுபச்செய்தி வரும் என்பதைக் குறிக்கிறது.
    23. இடாகினி(காளி) தெய்வத்தை கனவில் கண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதைக் குறிக்கிறது.
    24. இந்திர தனுசு(வானவில்) கனவில் கண்டால் குடும்பத்தில் இருப்பவர்களின் வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
    25. ஈக்கள் தன்னைச் சுற்றி வருவது போல் கனவு கண்டால் வெளிவட்டாரங்களில் பகைமை அதிகரிக்கும்.
    26.  ஈச்ச மரத்தைக் கனவில் கண்டால் தன்னுடைய சொந்த பந்தங்களில் பகைமையை உருவாக்கும்.
    27. கனவில் உடை எரிவதுபோல் கண்டால் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் பூப் பெய்துவார்கள். பொருள் இழப்பு ஏற்படலாம்.
    28. உடுக்கையை காண்பது போல் கனவு கண்டால் தனக்கு ஏற்படும் ஆபத்திற்கு நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள் என்பதைக் குறிக்கிறது.
    29. உணவு உண்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
    30. உணவு சமைப்பது போல் கனவு கண்டால் முதலாளியாக இருப்பவர்கள் தொழிலாளியாக மாறுவார்கள் என்பதைக் குறிக்கிறது.
    31. உத்தியானம் (தோட்டம்) வருவது போல் கனவு கண்டால் குடும்பம் விருத்தியாகும் என்பதைக் குறிக்கிறது.
    32. உப்பைக் கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும்.
    33. உரம் இடுவதாக கனவில் கண்டால் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் என்பதைக் குறிக்கிறது.
    34. உப்பளத்தை கனவில் கண்டால் விருந்துக்குப் போகப் போகிறோம் என்பதைக் குறிக்கிறது.
    35. ஊமையைக் காண்பது போல் கனவு வந்தால் தொழிலில் தேக்க நிலை ஏற்படும்.
    36. ஊன்(இறைச்சி) விற்பதைக் கனவில் கண்டால் எதிர்பாராத தன வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
    37. எண்ணெய் தேய்த்துக் கொள்வது போல் கனவு கண்டால் உடல் வலிமை குறையும் என்பதைக் குறிக்கிறது.
    38. எருது மிதிப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் குறையும்
    39. எருது சீறுவது போல் கனவு கண்டால் அதிகாரம் குறையும்.
    40. எறும்பு ஊறுவதை கனவில் கண்டால் பதவி உயர்வு உண்டாகும்.
    41. எள்ளை கனவில் கண்டால் அசுப காரியம் ஏற்படுவதை உணர்த்துகிறது.
    42. ஏணியின் மேலே ஏறுவது போல் கனவு கண்டால் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
    43. ஏணியில் கீழே இறங்குவது போல் கனவு கண்டால் தொழிலில் தாழ்வு நிலை ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
    44. ஒட்டகத்தைக் கனவில் கண்டால் பயணங்களில் பல்வேறு இன்னல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
    45. ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதை குறிக்கிறது.
    46. ஓநாய் விரட்டிக் கொண்டு வருவது போல் கனவு கண்டால் மனதிற்கு பிடித்த உறவினர்களால் பகைமை ஏற்படுவதை குறிக்கிறது.
    47. கங்கை நதியை கனவில் கண்டால் துன்பம் அனைத்தும் விலகும் என்பதைக் குறிக்கிறது.
    48. கடற்கரையில் இருப்பது போல் கனவு கண்டால் வாழ்வில் உயர்வு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
    49. கத்திரிக்காய் சாப்பிடுவது போல் கனவு வந்தால் குடும்பத்தில் சௌபாக்கியம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
    50. கல்யாணம் நடப்பது போல் கனவு கண்டால் வியாதியால் துன்பம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
    51. கனிகளை கனவில் காண்பது மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
    52. காகம் தலையில் அடிப்பதாக கனவு கண்டால் கெடுதல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
    53. காசி நகரத்தைக் கனவில் கண்டால் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும் என்பதைக் குறிக்கிறது.
    54. காவல்காரர்களை காண்பது போல் கனவு வந்தால் சாதகமற்ற நிலையை உண்டாக்கும்.
    55. கிழங்குகளை கனவில் கண்டால் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
    56. கிழவியை காணுவது போல் கனவு வந்தால் தனப் பெருக்கம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
    57. கீரியை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்
    58. பூக்கள் நிறைந்த கலத்தை கனவில் கண்டால் வருமானம் பெருகும் பொருளாதார வளம் ஏற்படும்.
    59. பூச்செண்டு கனவில் வருவது பொருளாதார மேன்மை குறைவதை சுட்டிக் காட்டுகிறது.
    60. பெண் தன்னை நோக்கி வருவது போல் கனவு வந்தால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
    61. பெருச்சாளியை கனவில் கண்டால் இன்னல்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
    62. பேன் தலையில் இருப்பது போல் கனவு கண்டால் ஏமாற்றம் உண்டாகும்.
    63. பை நிறைய தானியங்கள் இருப்பது போல் கனவு கண்டால் சுபம் உண்டாகும்.
    64.  பைத்தியத்தை கனவில் கண்டால் காரிய சித்தி உண்டாகும்.
    65. பொன்(தங்கம்) கனவில் வந்தால் மங்களம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
    66.  மயானத்தை கனவில் கண்டால் காரியத் தடங்கல் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
    67. மரணத்தை கனவில் கண்டால் குழந்தைப் பேறு கிட்டும்.
    68. மரத்தை பதமையான (மென்மையான) நிலையில் இருப்பது போல் கனவு கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் என்பதைக் குறிக்கிறது.
    69. மலர்களை கனவில் கண்டால் சொத்து அபிவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
    70. மழையை கனவில் கண்டால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
    71.  மாமிசம் கொண்டு செல்வது போல் கனவு வந்தால் கீர்த்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

    72. மாதுளை பழத்தை உண்பது போல் கனவு கண்டால் கெட்ட நிகழ்வு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
    73. மிருதங்க ஒலியை கேட்பது போல் கனவு கண்டால் விரைவில் திருமணம் கைகூடும்.
    74. மின்னலை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
    75.  மீன்களை கனவில் காணுதல் நன்மை பயக்கும்.
    76. மூடவரைக் கனவில் கண்டால் தன விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
    77. முதலையை கனவில் கண்டால் அறிவாற்றல் பெருகும் என்பதைக் குறிக்கிறது.
    78. முத்தை கனவில் கண்டால் புகழ் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
    79. முயலை கனவில் கண்டால் பொருள் வரவு ஏற்பட்டு இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
    80. மேட்டில் இருப்பது போல் கனவு கண்டால் பொறுப்புகள் அதிகரிக்கும்.
    81. மொட்டை அடிப்பது போல் கனவு கண்டால் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
    82. மோதிரம் கனவில் வந்தால் சுப பலன்கள் உண்டாகும்.
    83. யாகத்தை கனவில் கண்டால் பிரச்சனைகளால் துன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
    84. யானையை கனவில் கண்டால் மகிழ்ச்சி உண்டாகும்.
    85. ரத்தத்தை கனவில் கண்டால் பொருள் சேர்க்கை உண்டாகும்.
    86. வண்டியை கனவில் கண்டால் இன்பம் மற்றும் துன்பம் சரிபாதி அளவில் இருக்கும் என்பதைக் குறிக்கிறது.
    87. வண்டுகள் தேனை சேகரிப்பது போல் கனவில் கண்டால் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.
    88. வலிமைமிக்கவர்களை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும்.
    89. வாத்தை கனவில் கண்டால் கடன் உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.
    90. விதவையை கனவில் கண்டால் உயர் பதவிகள் கிடைக்கும்.
    91. விவசாயியை கனவில் கண்டால் செய்யும் காரியம் வெற்றியில் முடியும் என்பதைக் குறிக்கிறது.
    92. வில்வ இலையை கனவில் கண்டால் புத்திக்கூர்மை பெருகும்.
    93. விளக்கு எரிவதைப் போல் கனவு கண்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
    94. விளை நிலத்தை பசுமையுடன் கனவில் கண்டால் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.
    95. வீணை ஓசையை கேட்பது போல் கனவு வந்தால் சுப செய்தி வரும் என்பதைக் குறிக்கிறது.
    96. வைத்தியம் செய்பவரை கனவில் கண்டால் தனலாபம் கிட்டும்.


    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    ஆன்மிக தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    திருமண
    பொருத்தம்
    பிறந்த நாள்
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2023 | Tamil Monthly Calendar 2023 | Tamil Calendar 2023 | Tamil Muhurtham Dates 2023 | Tamil Wedding Dates 2023 | Tamil Festivals 2023 | Nalla Neram 2023 | Amavasai 2023 | Pournami 2023 | Karthigai 2023 | Pradosham 2023 | Ashtami 2023 | Navami 2023 | Karinal 2023 | Daily Rasi Palan |