2021 புத்தாண்டு விருச்சிகம் ராசி பலன்கள் - New Year Rasi Palan Viruchigam 2021

    விருச்சிகம் ராசி பலன் 2021 -Viruchigam Rasi Palan 2021

    பொதுவாக 2020ஆம் ஆண்டு  பட்ட கஷ்டங்களும் வேதனைகளும் அளவில்லாமல் காணப்பட்டது நோய் கோளாறுகள் மற்றும் உறவுமுறைகளில் சந்திப்பதில் தடைகள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் என்ற ஒரு அமைப்புகள் வருமானம் இல்லை தொழில் வேலை தடைகள் போன்ற பல இன்னல்களும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

     அவையெல்லாம் 2021 மாற்றி அனைத்து மக்களுக்கும் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்து சந்தோஷமாக இணக்கமாக நோய் கோளாறுகள் இன்றி ஆரோக்கியத்துடன் காணப்படும் வேண்டும் எடுத்த செயல்களில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தித்துக் கொண்டு .'

    விருச்சிகம் ராசி 

    இந்த 2021 ஆம் ஆண்டு விருச்சிகம் ராசி காரர்கள் பொறுத்தவரை இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்கள் வேதனைகளில் ஒவ்வொன்றாக மாறப்போகிறது என்று சொன்னால் மிகையில்லை ஏனெனில் உங்களுக்கு ஏழரை சனியின் பாதிப்பு முற்றிலுமாக விளக்கப் இருக்கிறீர்கள்.

     இதுநாள்வரை தடைகளும் தாமதங்களும் கொண்டுவந்த உங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி மற்றும் புதிய காரியங்களில் நல்ல ஒரு நன்மைகள் ஏற்படும் விதமாக காணப்படும் இரண்டாம் இடத்தில் இருந்த குருபகவான் 3ம் இடத்திற்கு இடப்பெயர்ச்சி மற்றும் இரண்டாம் இடத்தில் இருந்த சனிபகவான் 3-ம் இடத்திற்கு தன்னுடைய ஆட்சி வீட்டிற்கு செல்கிறார்.


     மூன்றாம் இடத்து குரு மற்றும் சனி பார்வை உங்களுக்கு பலவித ஏற்றமும் இறக்கமும் போன்ற நன்மைகளை தந்தருளும். குருவின் பார்வையால் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் 9-ஆம் இடத்தையும் 11-ஆம் இடத்தையும் பார்வைகள் படுகின்றன ஏழாமிடத்தில் படும் பொழுது அங்கு ஏற்கனவே ரிஷபம் ராசியில் ராகு பகவான் இருக்கிறார்.

     ராகுவினால் வரும் தொல்லைகள் ஓரளவு குறைந்து மன மகிழ்ச்சி கொள்ளும் அமைப்புகள் சிறப்பாக காணப்படுகிறது. வாழ்க்கைத் துணை வழியே இருந்த ஏற்ற இறக்கங்கள் மனக்கசப்புகள் சங்கடங்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள் கூட்டாளிகளிடம் இருந்த இணக்கம் இல்லாத சூழ்நிலையில் எல்லாம் மாறி நல்ல இணக்கமான ஒரு அன்பான மனமகிழ்ச்சி தரும் அமைப்பாக மாறும் இருந்தாலும் உங்கள் வாழ்க்கைத்துணை  ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

     குருவின் பார்வை அற்புதமான பலன்களை கொடுத்தாலும் சனியின் பார்வை தீமையாக இருக்கிறது எனினும் 12-ஆம் இடத்தை சனி 10-ம் பார்வையாக பார்க்கிறார் தெளிவில்லாத சிந்தனைகள் மாறி மாறி வருகின்ற அமைப்புகள் காணப்படுவதால் இந்த விஷயத்தில் நிதானம் பொறுமை கடந்து நீங்கள் செய்வது ஒரு நல்ல ஒரு அமைப்பாக காணப்படும்.

     புதிய சொத்து சேர்க்கை நிலம் மனை வீடு போன்ற விஷயங்களை நன்மைகள் ஏற்படுகின்றன அமைப்பு இருக்கிறது. மனதில் இருக்கிற  ஆசை அபிலாஷைகள் நிறைவேறும் தன்மைகள் அற்புதமாக காணப்படுகிறது.

     அதேசமயம் குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு செல்லும் பொழுது 12-ம் வீட்டையும் பார்க்கிறார் மற்றும் பத்தாம் வீட்டையும் பார்க்கிறார் உங்களுடைய 8-ஆம் இடத்தையும் பார்க்கிறார் இதுவரை கடன் பிரச்சனை நோய் நொடிகள் இருந்தாலும் கூட அது மெல்ல மெல்ல மாறி நல்ல நன்மையான தன்மை நிலைமைக்கு வருகின்றது .

    குடும்பம் 

    குடும்பத்தில்  மென்மையான போக்கு காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களையே சில வாக்குவாதங்கள் வருவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. கணவன் மனைவி இடையே உண்டான உறவு  மகிழ்ச்சிகரமாக காணப்பட்டாலும் விருச்சிகம் ராசியில் இருக்கும் கேது ஏதாவது ஒரு வகையில் தடைகளும் தாமதங்களும் உடல்நலக் கோளாறுகளும் கொண்டு வந்து கொடுக்கும் என்பதில் கவனம் தேவை .

    நிதானமாக செயல்படுங்கள் , குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகள் போன்ற சிறப்பான அமைப்பு காணப்படுகின்றது .எதிர்பார்த்திருந்த தூர தேச பயணம் இனிதே நிறைவேறிட நல்ல ஒரு வாய்ப்பாக அமைகின்றது குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து உங்கள் கருத்துக்களை முன்வைத்து அவர்களின் ஒத்துழைப்பும் பெற்று செய்வது மூலமாக நல்ல நன்மைகளும் காணப்படுகிறது.

     குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை மற்றும் நண்பர்கள் உற்றால் உறவினர்களின் ஒத்துழைப்பு போன்றவையும் சிறப்பாகவே இருக்கின்றது இருந்தாலும் ஒரு சில விஷயங்கள் நீங்கள் விட்டுக் கொடுத்து சென்றால் நன்மை காணப்படும் .

    தொழில் மற்றும் வியாபாரம்

     இதுவரை தடையாகி  சென்று கொண்டிருந்த தொழில் மற்றும் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் கொடுக்கின்ற அமைப்பாகவே விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இருக்கிறது. குருவின் பார்வையை உங்களுக்கு அற்புதமான பலன்களை கொண்டுவரும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை இருந்தாலும் சனி  பார்வைகளால் சில தடைகளும் தாமதங்களும் கொடுத்து அனுபவங்களையும் கற்க வைக்கிறார்.

     விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் புது உத்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் வியாபாரத்தில் சக ஊழியர்கள் கூட்டாளிகளிடம் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கும் போது நல்ல மேன்மையான பலன்கள் கிடைக்கிறது. புதிய முதலீடுகள் புதிய மாற்றங்கள் செய்வதற்கு முன் உங்களுடைய ஜாதகத்தைப் பார்த்ததில் இருக்கும் சாதக பாதகங்களை தெரிந்து கொண்டு நடத்துவது சிறப்பானதாக இருக்கும்.

    நிதி பொருளாதாரம்

     நிதி மற்றும் பொருளாதார ஏற்றம் இறங்குமுகமாக காணப்படுகின்றது .நன்மை  தீமை இரண்டும் கலந்த கலவையாக தான் இருக்கின்றது அடுத்தவர்களுக்கு நிதி மற்றும் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் .நிதி சம்பந்தமான விஷயங்களில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் சகோதர சகோதரிகளிடையே நிதி போன்ற விஷயங்களில் சொத்து சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் என்று சொல்லலாம்.

     தந்தையின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படுவதற்கு மருத்துவ செலவுகளும் காணப்படுகிறது. எதிர்பார்த்த நிதி மற்றும் பொருளாதார நிலைகளில் அமல்படுத்துவதற்கு ஏதுவான அமைப்பு தாமதித்து என்று சொல்லலாம் .நிலம் மனை வீடு போன்ற சொத்து சேர்க்கையினால் செலவுகள் காணப்படும் .இல்லறத்துணையின் வழியே நன்மைகளும் காணப்படும்.

    பெண்கள் 

     2021  புத்தாண்டு விருச்சிக ராசி பெண்களைப் பொருத்தவரை சற்று நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம் .விரும்பிய ஆடை ஆபரணச் சேர்க்கை விரும்பிய இடமாற்றங்கள் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமணம் ஆகக் கூடிய வாய்ப்புகள் சிறப்பாகக் காணப்படுகிறது .


    நீண்ட நாட்களாக குழந்தை  இல்லை என்று ஏங்கிய  தம்பதியர்களுக்கு  குழந்தை பிறக்கும் வாய்ப்பு அற்புதமாக இருக்கிறது. 

    தொழில் மற்றும் வேலை 

    தொழிலில் மற்றும் வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் கிடைப்பதற்கு சற்று காலதாமதம் ஆனாலும் கூட அது கையில் கிடைக்கும் தருணம் அற்புதமாக உள்ளது .கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக அதிகம் பாடுபடுவீர்கள். உடல்நிலையில் சற்று அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் குறிப்பாக வயிற்று சம்பந்தமான கால் பாதங்கள் மற்றும் தலை சம்பந்தமான பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை வெளி உலக பழக்கவழக்கங்கள் சிறப்பான நன்மைகளை கொடுக்கும் .

    ஆரோக்கியம்

     விருச்சிகம் ராசி காரர்கள் இந்த ஆண்டைப் பொறுத்தவரை ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும்.உடல்  நிலையில்  சற்று ஆரோக்கியமாக கவனித்து வந்தால் நன்மை உண்டாகும். வெளியூர் வெளிநாடு பயணங்கள் காணப்படுவதால் உணவு  விஷயங்களில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நன்மை தரும் .

    உடலுக்கு ஒவ்வாத உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது குறிப்பாக மற்றும் கார அமிலத்தன்மை நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நன்மை பயக்காது எதுவாக இருந்தாலும் சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து  கொண்டால் நன்மை கொடுக்கும் .

     குடும்பத்தில் உள்ளவர்கள் பெரியவர்களின்  ஆரோக்கியத்தில்  அதிகமான கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குறிப்பாக தந்தை உடனே சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. சத்துள்ள உணவு பொருட்களை உட்கொண்டு வாருங்கள்.

    வழிபாடு

     இந்த புத்தாண்டை பொருத்தவரை விருச்சிகம் ராசிக்காரர்கள்  குலதெய்வத்தை வணங்கி வாருங்கள் சனிக்கிழமை ஆஞ்சநேயர் மற்றும் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி காலபைரவர் வணங்கி வரும் பொழுது  வாழ்வில் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வெளிவந்து மன மகிழ்ச்சி கொள்ளும்.

     எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும் .சுப நிகழ்ச்சிகள் அரங்கேறும் போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் கவனத்தை செலுத்துங்கள் நன்மை உண்டாகும்.

    வாழ்த்துக்கள்

     2021 புத்தாண்டில் விருச்சிக ராசிக்காரர்கள் அனைத்து செல்வங்களும் பெற்று மனம் நிம்மதியாக விட்டுக்கொடுத்து குடும்பத்தில் அனைவரும் அன்பு சந்தோஷம் மன மகிழ்ச்சி நிறைந்த மற்றும் சிறந்த ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன்


    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    ஆன்மிக தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    திருமண
    பொருத்தம்
    பிறந்த நாள்
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2023 | Tamil Monthly Calendar 2023 | Tamil Calendar 2023 | Tamil Muhurtham Dates 2023 | Tamil Wedding Dates 2023 | Tamil Festivals 2023 | Nalla Neram 2023 | Amavasai 2023 | Pournami 2023 | Karthigai 2023 | Pradosham 2023 | Ashtami 2023 | Navami 2023 | Karinal 2023 | Daily Rasi Palan |