2021 புத்தாண்டு துலாம் ராசி பலன்கள் | New Year Rasi Palan Thulam 2021

     துலாம் ராசி பலன் 2021 - Thulam Rasi Palan 2021

     2021இல் உங்களுடைய ராசிப்படி சனி பகவான் நான்காவது வீட்டில் இருந்து கொண்டே பத்தாம் வீட்டை பார்வையிடுகிறார். செவ்வாய் பகவான் ஏழாவது வீட்டிலும், ராகு எட்டாவது வீட்டிலும், கேது இரண்டாவது வீட்டிலும் அமர்ந்து கொண்டிருப்பார்கள். மற்ற கிரகங்கள் அவ்வபோது பெயர்ச்சி ஆகி கொண்டே இருப்பார்கள். ஆக உங்களுடைய ராசிக்கு நல்லதும், கெட்டதும் சேர்ந்தே நடக்கும். ஒரு வகையில் நல்லது நடந்தால் இன்னொரு வகையில் கெட்டதும் கூடவே வரும். 

    குடும்பம்: 

    குடும்பத்தைப் பொறுத்தவரை துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருந்தாலும் அவ்வபோது மனஸ்தாபங்களும் வந்து போகும். சகோதர சகோதரிகளின் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி மீண்டும் பழையபடி ஒன்றாக இணைவார்கள். உங்களுக்கு வாழ்க்கை துணையாக இருப்பவர்களே உங்களுடைய முன்னேற்றத்திற்கு காரணமாக அமைவார்கள். பழைய பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் புதுப்பிக்கும் வகையில் வாய்ப்புகள் உண்டாகும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். 

    வியாபாரம் மற்றும் தொழில்: 

    தொழில் மற்றும் வியாபாரத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு ஆண்டின் நடுப்பகுதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியானது உங்களுடைய ராசிக்கு 10-வது வீட்டில் வரும் பொழுது தேவையில்லாத பிரச்சினைகள் தலைதூக்கும். உடன் பணிபுரிபவர்களிடம் தேவையில்லாத மனக்கசப்புகள் உருவாக வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டால் மரியாதையும் அதிகரிக்கும். ஆண்டின் தொடக்கத்தில் லாபம் பெறுவதில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் ஆண்டின் கடைசி மாதங்களில் நல்ல லாபம் நீங்கள் காணலாம். 

    உத்தியோகம்: 

    உத்தியோகத்தை பொறுத்தவரை துலாம் ராசிக்காரர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் சிறப்பாக அமையாவிட்டாலும், ஏப்ரல் மாதத்தில் வரும் குரு பெயர்ச்சிக்கு பிறகு நன்றாகவே இருக்கும். நீங்கள் எதிர் பார்க்கும் இடமாற்றங்களும், பதவி உயர்வுகளும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க நீங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சக பணியாளர்களுடன் இணக்கமாக செல்வதன் மூலம் அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மேல் அதிகாரிகளின் தொந்தரவு நீங்கி, புதிய வாய்ப்புகளை அவர்களிடமிருந்தே பெறுவீர்கள். 

    பொருளாதாரம்: 

    துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த ஆண்டில் தொடக்கத்தில் இறக்கத்துடன் காணப்பட்டாலும், மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டத்தில் ஏற்றத்துடன் இருக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் வீட்டு தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். வீட்டிற்கு புதிய பொருட்கள் வாங்குவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதற்கு முன்னர், முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். 

    பெண்களுக்கு: 

    பெண்களுக்கு ஆண்டின் இறுதியில் நல்ல நிகழ்வுகள் நடைபெறும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் வாய்ப்புகளும் வந்து சேரும். இல்லத்தரசிகளுக்கு இதுவரை இருந்து வந்த சோர்வு நீங்கி, புதிய உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சிலருக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பணத்தை முதலீடு செய்வதில் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிடுவார்கள். 

    பரிகாரம்: 

    துலாம் ராசியில் பிறந்தவர்கள் பசுமாட்டிற்கு தீவனம் கொடுத்து வர நன்மைகள் நடைபெறும். பித்ரு பூஜைகளை முறையாக செய்து வர நல்ல பலன்கள் உண்டாகும். வியாழன் தோறும் குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வர சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் செய்வது பாவத்தை நீக்கி, அதிர்ஷ்டம் உண்டாக வழி வகுக்கும். வரவிருக்கும் 2021 ஆம் ஆண்டு துலாம் ராசிக்காரர்கள் ஆகிய உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.


    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    ஆன்மிக தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    திருமண
    பொருத்தம்
    பிறந்த நாள்
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2023 | Tamil Monthly Calendar 2023 | Tamil Calendar 2023 | Tamil Muhurtham Dates 2023 | Tamil Wedding Dates 2023 | Tamil Festivals 2023 | Nalla Neram 2023 | Amavasai 2023 | Pournami 2023 | Karthigai 2023 | Pradosham 2023 | Ashtami 2023 | Navami 2023 | Karinal 2023 | Daily Rasi Palan |