2021 புத்தாண்டு மகரம் ராசி பலன்கள் | New Year Rasi Palan Makaram 2021

     மகரம் ராசி பலன் 2021 - Magaram Rasi Palan 2021

    சனியை ராசிநாதனாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே ! 

    இந்த ஆண்டு மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். ஆனால் மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைப்பீர்கள். எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம்.

    உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். எனினும் நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும். வாகன யோகம் உண்டு. பெரியோர்களின் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது.

    தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

    குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும்.

    பெண்கள் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.

    கலைத்துறையினருக்கு செலவுகள் ஏற்படும். பயண சுகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படும். வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கவனம் தேவை. கிடைக்கும் வாய்ப்புகளுக்காக அயராது உழைத்தால் வெற்றி நிச்சயம்.

    அரசியலில் உள்ளவர்களுக்கு தேவையான பணஉதவி கிடைக்கலாம். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். மேலிடத்தில் வரும் உத்தரவுகளை தாமதிக்காமல் செய்து முடிப்பது உங்களுக்கு நன்மை தரும்.

    மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

    உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:

    இந்த வருடம் தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும். வேலை தேடுபவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.எதிர்ப்புகள் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும். எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியை தரும்.

    திருவோணம்:

    இந்த வருடம் இன்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம்.

    வீண் அலைச்சலை தவிர்த்து எடுத்து கொண்ட காரியங்களில் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும். மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கெட்ட கனவுகள் தோன்றலாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம்.

    அவிட்டம் 1,2 பாதங்கள்:

    இந்த வருடம் தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

    கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

    பரிகாரம்: 

    விநாயகருக்கு சனிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

    சிறப்பான கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

    அதிர்ஷ்ட எண்கள்: 6, 7, 9

    சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் கம் கணபதயே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லவும்

    அனுகூலமான திசைகள்: மேற்கு, தெற்கு.- source: webdunia


    தமிழ் காலண்டர்
    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    கௌரி
    பஞ்சாங்கம்
    கிரக ஓரை
    காலம்
    ராகு,குளிகை
    எமகண்டம்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    ஆன்மிக தகவல்கள்
    சுப
    முகூர்த்தம்
    ஆன்மிக
    தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    திருமண
    பொருத்தம்
    ஆன்மிக
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    .
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2022 | Tamil Monthly Calendar 2022 | Tamil Calendar 2022 | Tamil Muhurtham Dates 2022 | Tamil Wedding Dates 2022 | Tamil Festivals 2022 | Nalla Neram 2022 | Amavasai 2022 | Pournami 2022 | Karthigai 2022 | Pradosham 2022 | Ashtami 2022 | Navami 2022 | Karinal 2022 | Daily Rasi Palan |