மேஷம் ராசி பலன்கள் 2021 - Mesha Rasi Palangal 2021

    2021 மேஷம் ராசி பலன்கள் - 2021 Mesha Rasi Palan

    துடிப்பும், வேகமும் கொண்ட மேஷ ராசி அன்பர்களே.. 

    குடும்ப உறுப்பினர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த சாதகமான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பங்காளி வகை உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவீர்கள். தவறிய சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதன் மூலம் சேமிப்புகளை அதிகப்படுத்த இயலும்.

    உடல் ஆரோக்கியம் :

    உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். உணர்ச்சிவசப்படும் சூழ்நிலைகளில் இருக்கும்போது நிதானத்துடன் இருக்க வேண்டும். கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும்.

    திருமண வாழ்க்கை :

    திருமணம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சலுக்கு பின்பே ஆதாயமான சூழ்நிலைகள் உண்டாகும். நிதானத்துடன் செயல்பட்டால் காரிய வெற்றி அடைவதுடன் மகிழ்ச்சியான இல்வாழ்க்கையை அமைத்து கொள்ள முடியும். திருமணமான தம்பதிகளுக்கு குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் சுபிட்சம் உண்டாகும்.

    உத்தியோகஸ்தர்கள் :

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்த்திருந்த முன்னேற்றமான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். முயற்சிகளுக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

    மாணவர்கள் :

    அடிப்படை கல்வி பயிலும் மாணவர்கள், விளையாட்டு தொடர்பான விஷயங்களில் கவனத்தை குறைத்து கொண்டு படிப்பில் கவனத்தை செலுத்துவது நன்மதிப்பை பெற உதவும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.

    வியாபாரிகள் :

    புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். திரவிய பொருட்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும், லாபங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

    கலைஞர்கள் :

    கலைத்துறை சார்ந்த கலைஞர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் கிடைக்கப் பெறுவீர்கள். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் அமையும்.

    அரசியல்வாதிகள் :

    அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்கள் தொண்டர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள். முயற்சிக்கு உண்டான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும். கட்சி தொடர்பான உயரதிகாரிகளிடத்தில் நிதானத்தை கையாளவும்.

    நன்மைகள் :

    ராசி அதிபதியும், தொழில் ஸ்தானமும் வலுவான நிலையில் இருப்பதினால் எண்ணத் தெளிவுடனும், தொழில் சார்ந்த முன்னேற்றத்துடனும் பிறக்கப் போகின்ற புதுவருடத்தில் முன்னேற்றத்தை அடைவதற்கு மேஷ ராசி அன்பர்களுக்கு  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    கவனம் :

    புதிய மனை மற்றும் வாகனம் தொடர்பான பயணங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    வழிபாடு :

    செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை வெள்ளை பூக்களை கொண்டு வழிபாடு செய்துவர இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.


    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    ஆன்மிக தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    திருமண
    பொருத்தம்
    பிறந்த நாள்
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2023 | Tamil Monthly Calendar 2023 | Tamil Calendar 2023 | Tamil Muhurtham Dates 2023 | Tamil Wedding Dates 2023 | Tamil Festivals 2023 | Nalla Neram 2023 | Amavasai 2023 | Pournami 2023 | Karthigai 2023 | Pradosham 2023 | Ashtami 2023 | Navami 2023 | Karinal 2023 | Daily Rasi Palan |