2021 கடகம் ராசி பலன்கள் - 2021 Kadagam Rasi Palangal

    கடகம் ராசி பலன் 2020 - Kadagam Rasi Palan 2020

    எதற்கும் கலங்காத மனமும், எதிர்ப்பை கண்டு அஞ்சாத குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே..

    செய்கின்ற முயற்சிகளின் மூலம் முன்னேற்றத்தை உருவாக்கி கொள்வதற்கான காலக்கட்டங்கள் உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் எதிர்பாராத செலவுகள் அவ்வப்போது ஏற்பட்டு கொண்டிருக்கும்.

    ஆரோக்கியம் :

    தாயின் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மாத்திரைகள் சாப்பிடும்போது மாத்திரைகளின் தன்மைகளை அறிந்து சாப்பிட வேண்டும். ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

    திருமணம் :

    எதிர்பார்த்த வரன்கள் சாதகமாக அமையும். குடும்ப பெரியவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்ள இயலும். நிதானத்துடன் செயல்பட்டால் மனதிற்கு பிடித்த இடத்தில் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

    உத்தியோகஸ்தர்கள் :

    உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். புதிய வேலை தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் திட்டமிட்ட பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள்.

    மாணவர்கள் :

    அடிப்படை கல்வி பயிலும் மாணவர்களுக்கு பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வமும், அவ்வப்போது கவனச்சிதறலும் ஏற்பட்டு கொண்டிருக்கும். உயர்கல்வி சார்ந்த செயல்பாடுகளில் சிறு சிறு தடைகளுக்கு பின்பே எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

    வியாபாரிகள் :

    சுயதொழில் புரிபவர்கள் நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படுவது நன்மையை அளிக்கும். எதிர்பாராத அளவில் ஆதாயமும், ஒருவிதமான சோர்வும் ஏற்பட்டு மறையும். ஆடம்பரம் தொடர்பான பொருட்கள் மற்றும் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும்.

    கலைஞர்கள் :

    கலை சார்ந்த துறையில் இருப்பவர்கள் புதுவிதமான சிந்தனைகளும், எதிர்பாராத வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் காலதாமதமாகவே கிடைக்கும்.

    அரசியல்வாதிகள் :

    அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் கோபமின்றி பொறுமையுடன் செயல்படுதல் அவசியம் ஆகும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் மேன்மை உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சுக்களில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.

    நன்மைகள் :

    மனதில் புதிய தன்னம்பிக்கையுடனும், எண்ணத் தெளிவுடனும் காரிய வெற்றிகளை சாதித்து, சேமிப்புகளை மேம்படுத்தி தொழில் சார்ந்த துறையில் முன்னேற்றத்தையும் உருவாக்கிக்கொள்ள பிறக்கப் போகின்ற புதுவருடத்தில் நன்மைகள் மென்மேலும் பெருகிட கடக ராசி அன்பர்களுக்கு  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    கவனம் :

    கிடைக்கும் வாய்ப்புகளில் ஏற்படும் தேவையற்ற விதண்டாவாதங்களால் காலதாமதம் நேரிடலாம். ஆரோக்கியம் மற்றும் பயணம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும்.

    வழிபாடு :

    சனிக்கிழமைதோறும் பிரத்யங்கிரா தேவியை வழிபாடு செய்து வர செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம், எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.


    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    ஆன்மிக தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    திருமண
    பொருத்தம்
    பிறந்த நாள்
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2023 | Tamil Monthly Calendar 2023 | Tamil Calendar 2023 | Tamil Muhurtham Dates 2023 | Tamil Wedding Dates 2023 | Tamil Festivals 2023 | Nalla Neram 2023 | Amavasai 2023 | Pournami 2023 | Karthigai 2023 | Pradosham 2023 | Ashtami 2023 | Navami 2023 | Karinal 2023 | Daily Rasi Palan |