குழந்தை வளர்ப்பு டிப்ஸ்


    குழந்தை வளர்ப்பு
    1 மாத குழந்தை வளர்ப்பு என்பது சவாலான செயல்தான், நம் இரண்டு கண்களையும் குழந்தை மீதே வைது இருக்க வேண்டும்.

    ஏறத்தாழ இச்சயமத்தில், உங்கள் குழந்தை ஒரு பொருளின் மீது இரண்டு கண்களின் கவனத்தையும் செலுத்த தொடங்கும். அவனுக்கு முன்பாக ஒரு விளையாட்டுப் பொருளை அசைத்தால் அவன் அதை கவனிப்பான். ஆனால், அது மறைந்துவிட்டால், அப்படி ஒன்று இருந்ததையே உங்கள் குழந்தை மறந்துவிடுவான்!

    உங்கள் குழந்தையின் நினைவாற்றல் நாளாக நாளாக வளர்ச்சி அடையும். அவன் விளையாட்டுப்பொருளை மறந்துவிடுவான், ஆனால் உங்கள் குரல் அவனுக்கு எப்போதும் தெரியும், உங்கள் கருப்பையில் இருந்தது முதலே அவன் அதை நினைவில் வைத்திருக்கிறான்.

    உங்கள் குழந்தையை குளிப்பாட்டுவது உங்கள் இருவருக்கும் உற்சாகமூட்டுவதாக இருக்கக்கூடும். ஒரு சுத்தமான துண்டை எடுத்து, அவனை சுத்தமான பாதுகாப்பான தண்ணீரைக் கொண்டு கழுவுங்கள். தண்ணீர் சூடாக இல்லாமல், கதகதப்பாக இருப்பதை உறுதிசெய்யுங்கள். பெரும்பாலான குழந்தைகள் தண்ணீரில் அமைதியாக இருந்து, அதை மகிழ்ந்து அனுபவிப்பார்கள். அவன் உங்களுக்குள் இருந்ததையும் அது நினைவுபடுத்தலாம். அவன் தண்ணீரில் இருக்கும்போது, எந்த நேரத்திலும் அவனை தனியே விட்டுச் சென்றுவிடாதீர்கள்.

    உங்கள் குழந்தையின் முகத்தைப் பார்த்து, கண்பார்வை தொடர்பை ஏற்படுத்துவது நல்லது. சமூக திறன்களை கற்றுக்கொள்ள இது அவனுக்கு உதவும். சீக்கிரத்தில், உங்கள் குழந்தை உங்கள் முகத்தை அடையாளம் கண்டுகொள்வான். மற்றவர்களை விட உங்களை அவன் விரும்புவான். உங்களை பார்க்கும்போது அவன் மகிழ்ச்சியினால் குழந்தை சத்தங்களை எழுப்பி, உதைப்பான். சீக்கிரத்தில் நீங்கள் அவனுடைய முதல் புன்னகையை பார்ப்பீர்கள் !

    உங்கள் குழந்தை தன் சுற்றுச்சூழலையும் கவனிக்கிறான். சத்தங்கள் அவனுக்கு ஆர்வமூட்டத் தொடங்கும், மேலும் அவன் வண்ணங்களையும் விரும்புவான்.

    இப்போது, குப்புற படுத்திருக்கும்போது உங்கள் குழந்தையால் தன் தலையையும், மார்பையும் தூக்க முடியும். தன் தலையை கட்டுப்படுத்த கற்றுக்கொள்வது அவனுக்கு ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்.

    உங்கள் குழந்தை தினந்தோறும் நீங்கள் பேசுவதையும் கேட்டுக்கொண்டு இருக்கிறான். நீங்கள் பேசும்போது, அவன் செய்வதை நிறுத்திவிட்டு நீங்கள் பேசுவதை கவனிக்கலாம். அவனிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருங்கள், அவனுடைய சத்தத்தை நீங்களும் ஏற்படுத்துங்கள். உங்கள் குழந்தையிடம் பேசுவது அவனுக்கு ஆறுதலாகவும், அவன் உங்களிடம் பேசுவதற்கு ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கும்.

    குழந்தைக்குப் போதிய அளவு பால் கிடைக்கிறதா?
    உங்கள் குழந்தை ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை வரை பால் குடிக்குமானால், அது உங்களுக்கு சௌகரியமாக இருந்தால், அதற்குப் போதிய அளவு பால் கிடைக்கிறது என்று அர்த்தம். பால் குடிக்கும்போது, உங்கள் குழந்தை விழுங்குவதை உங்களால் பார்க்க முடியும் மற்றும் பால் கொடுத்தபின், உங்கள் மார்பகங்கள் காலியாகவும், மிருதுவாகவும் ஆகிவிடும்.

    பாலை உறிஞ்சும்போது குழந்தை லயத்தை மாற்றிக் கொண்டு, குடிப்பதற்கு இடையில் அவ்வப்போது நிறுத்துவதும் இன்னொரு நல்ல அறிகுறியாகும். தான் தயாராக இருக்கும்போது. அது மீண்டும் குடிக்கத் தொடங்குவதும், தான் விரும்பும்போது உங்கள் மார்பைவிட்டு விலகுவதுமாக இருக்க வேண்டும்.

    உங்கள் குழந்தையின் நாப்கின்களும் அது போதிய பால் பெறுவதை சுட்டிக்காட்டும். அதனுடைய மலம் மஞ்சள் நிறமாக இருக்க வேண்டும், மற்றும் அடிக்கடி அது கழிக்கப்படலாம். குழந்தை பெரிதாகும்போது, வாரம் ஒருமுறை மட்டுமே அது மலம் கழிக்கக்கூடும்.

    அது மூன்று நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு ஒருமுறை மட்டும் மலம் கழித்தாலும், குழந்தை நன்றாகவே உள்ளது. அதற்கு மலச்சிக்கலுக்கான மூலிகை மருந்துகள் அல்லது கூடுதல் நீர் எதுவும் தேவையில்லை.

    குழந்தையின் நாப்கினை நீங்கள் மாற்றும்போது, அது வெளியேற்றுகின்ற நீரானது வெளிர் நிறமாகவும், வாடையில்லாமலும் இருக்க வேண்டும். குழந்தைக்கு ஒரு நாளைக்கு 6 முதல் 8 வரையிலான ஈரமான நாப்கின்கள் இருக்க வேண்டும்.

    உங்கள் குழந்தையின் நாப்கினில் நீங்கள் ஆரஞ்சு அல்லது செங்கல் நிறத்தில் கறைகளைக் கண்டால், கவலைப்படாதீர்கள். இது வெப்பமான மற்றும் ஈரப்பதம் கொண்ட பருவநிலைகளில் சில சமயம் ஏற்படுவதுண்டு. குழந்தைக்குத் தொடர்ந்து அதற்குத் தேவைப்படும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுத்து வாருங்கள்.

    போதிய பால் குடிக்கும் குழந்தைக்கு உறுதியான, ஆரோக்கியமான நிறம் கொண்ட , மெல்லக் கிள்ளும்போது, உடனடியாகத் திரும்பவும் உறுதியாகிவிடுகின்ற சருமம் இருக்கும்.

    உங்கள் குழந்தைக்குப் போதிய அளவு பால் கிடைக்கவில்லை என்ற கவலை உங்களுக்கு இருக்குமானால், மருத்துவரிடம் கேளுங்கள். உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை அவர்களால் சோதித்துப் பார்க்க முடியும்.

    இப்போது நிறைய உணவைச் சாப்பிடுங்கள்!
    தாய்ப்பாலூட்டுதல் உங்களுக்கு மிகுந்த பசியை ஏற்படுத்தக்கூடும். வழக்கத்தைவிட நீங்கள் அதிகமாக சாப்பிட வேண்டியிருக்கும். பால் உருவாக்குவதில் உங்கள் உடல் மிகவும் சிறப்பாகச் செயலாற்றுகிறது, ஆனால் நீங்கள் போதிய அளவு சாப்பிடாவிட்டால், நீங்கள்சோர்வாகவும் மயக்கமாகவும் உணரக்கூடும்.

    புதிய பழங்கள் மற்றும் பச்சை இலைசார் காய்கறிகள், மாம்பழம், ஆரஞ்சு, வாழைப்பழம் போன்றவற்றை ஏராளமாகச் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

    உங்களுக்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாகக் கிடைக்கும் வகையில், பல வண்ணங்களில் இருக்கும் உணவுகளை உட்கொள்ளுங்கள்.

    சாதம், உருளைக்கிழங்கு, சப்பாத்தி, கஞ்சி மற்றும் தானியங்கள் போன்ற ஆற்றல் தரும் உணவுகளை உண்ணுங்கள்.

    முட்டை, பனீர், தால், மீன், கோழி மற்றும் இறைச்சியிலுள்ள புரதத்தை உட்கொள்ளுங்கள். பால், தேங்காய்ப்பால், கொட்டைகள் மற்றும் விதைகளை தினமும் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

    பல வகை உணவுகளை சாப்பிடுங்கள், அதன் மூலம் உங்கள் குழந்தைக்கு நீங்கள் நன்றாகப் பாலூட்டத் தேவைப்படும் அனைத்தையும் உங்கள் உடல் பெற்றுவிடும்.

    ஒரு நாளைக்கு குறிப்பிட்ட இடைவெளிகளில் 3 பெரிய உணவுகளை உட்கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆற்றலை உயர்ந்த அளவில் வைப்பதற்கு, நாள் முழுவதும் நிறைய சிற்றுண்டிகளைச் சாப்பிடுங்கள்.

    உலர்ந்த பழங்கள், கொட்டைகள், புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் விதைகள் நல்ல சிற்றுண்டிகளாகும். நீங்கள் தாய்ப்பாலூட்டும் காலத்தில், உங்கள் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    தாய்ப்பாலூட்டுவது உங்களுக்கு தாகத்தை ஏற்படுத்தலாம். உங்கள் குழந்தைக்கு நீங்கள் பாலூட்டுவதற்குமுன், பானம் ஒன்றைக் குடியுங்கள். சுத்தமான, பாதுகாப்பான நீர் சிறந்தது.

    பாலை உற்பத்தி செய்வதற்கு நீங்களும் பால் குடிக்க வேண்டுமென்பதில்லை, ஆனால் நீங்கள் சுத்தமான, பாதுகாப்பான நீரை ஏராளமாகக் குடிக்க வேண்டும்.

    தேநீர், காப்பி, கோலா அல்லது சுறுசுறு பானங்களைக் குடிக்காதீர்கள்.

    நீங்கள் சாப்பிட விரும்பாவிட்டால், அது உங்களுக்குக் கூடுதல் உதவி தேவைப்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். சாப்பிடுவது ஒரு போராட்டமாகவும், சாப்பிடுவதற்கு உங்களை நீங்கள் கட்டாயப்படுத்தவும் வேண்டியிருந்தால், உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

    குழந்தை பிறந்தபின் செய்யப்படும் சோதனைகள்
    நீங்கள், உங்கள் குழந்தை ஆகிய இருவருமே நன்றாக இருப்பதை உறுதி செய்வதற்கு, உங்கள் குழந்தை பிறந்தபின் வரும் வாரங்களில் நீங்கள் உட்நலப் பரிசோதனைகள் செய்து கொள்ளவது நல்லது மற்றும் தைரியம் தருவது.

    1-வது வாரத்தில் குறைந்தது ஒருமுறையும், அதன்பின் குழந்தைக்கு 6 வாரங்கள் ஆகும்போதும், உங்கள் குழந்தையுடன் மருத்துவரை சந்தியுங்கள்.

    கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் இருந்தால், 
    உங்கள் குழந்தையை உடனடியாக ஒரு குழந்தைநல மருத்துவரிடம் எடுத்துச் செலுங்கள்:
    அதன் வயிறு ரொம்பவும் குளிர்ச்சியாக அல்லது சூடாக இருத்தல்
    பிறந்த முதல் நாளுக்குள்ளாகவே அதன் கண்கள், கைகள் மற்றும் பாதங்கள் மஞ்சளாதல்
    அது சாப்பிட மறுத்தல் அல்லது மிகக்குறைவாகப் பாலை உறிஞ்சுதல்
    அது நிறுத்தாமல் அழுதல், அல்லது அதன் அழுகை வித்தியாசமாக ஒலித்தல்
    அதற்கு வலிப்பு ஏற்படுதல், அது மயக்கமாக இருத்தல் மற்றும் அதிக அசைவில்லாமல் இருத்தல், அல்லது சருமம் அல்லது நகங்கள் நீலமாக இருத்தல்
    அதற்கு மூச்சிழுப்பு இருத்தல், கனைத்தல் அல்லது மிகவேகமாக மூச்சுவிடுதல்
    ஒரு நாளைக்கும் மேலாக, ஒவ்வொரு முறை பால் குடித்த பிறகும் அது வாந்தியெடுத்தல், அல்லது வயிறு வீங்கியிருத்தல்
    உங்கள் குழந்தையின் தொப்புள் கொடி இருந்த இடத்தைச் சுற்றி சிவந்திருத்தல் அல்லது துர்வாடை வீசுதல்
    இவை, உங்கள் குழந்தை உடல்நலமின்றி இருக்கின்ற மற்றும் விரைவாகச் சிகிச்சை தேவைப்படுவதற்கான அறிகுறிகளாகும்.
    ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள் இருவருக்குமே ஒரே அளவு பரிசோதனைகள் தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    என் குழந்தை ஏன் அழுகிறது?
    எல்லா குழந்தைகளுமே அழும். தங்களுக்கு என்ன தேவை என்பதை நமக்குச் சொல்வதற்கு, அல்லது தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அவை இவ்வாறு செய்கின்றன. சில குழந்தைகள் மற்றவையைவிட அதிகமாக அழுவதுண்டு.

    உங்கள் குழந்தை அழுவதற்கு வழக்கமாக பசி காரணமாக இருக்கும். எனவே அது அழுதால், அது விரும்பும்வரை தாய்ப்பாலூட்டுங்கள். தனது வயிறு நிறையும்போது, குழந்தை சமாதானமாகிவிடும்.

    தங்களுக்கு அசெளகரியம் ஏற்படும்போது சில குழந்தைகள் அழுகின்றன. உங்கள் குழந்தையின் உடைகள் மிகவும் இறுக்கமாக இருக்கின்றனவா அல்லது அதனுடைய நாப்கின் ஈரமாகவோ, அசுத்தமாகவோ உள்ளதா என்று சோதித்துப் பாருங்கள்.

    குழந்தை மிகவும் சூடாகவோ அல்லது குளிராகவோ உணரக்கூடும். அதற்கு எத்தனை அடுக்கு உடைகள் அணிவிக்கப்பட்டுள்ளது என்று பாருங்கள். உங்களைவிட அதற்கு மேலும் 1 அடுக்கு உடை வெதுவெதுப்பாக இருக்கும்.

    உங்கள் குழந்தை ஓய்வெடுக்க அல்லது நீங்கள் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பலாம்.

    அழுகின்ற உங்கள் குழந்தையை பின்வரும் 3 வழிகளில் நீங்கள் சமாதானப்படுத்தலாம்:
    ஒரு கம்பளியில் அதனைச் சுற்றிவையுங்கள்.தாங்கள் கருப்பையில் இருந்ததைப்போல் கதகதப்புடன் இருப்பதற்கு குழந்தைகள் விரும்புகின்றன.
    உங்களுடன் சேர்த்து குழந்தையை ஒரு தூளியால் பிணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் இதயத்துடிப்பின் லயம் அதனை சாமாதானப்படுத்தலாம்.
    குழந்தைக்கு ஒரு பாட்டுப் பாடுங்கள்அல்லது அதனை மென்மையாக ஆட்டுங்கள்.
    உங்கள் குழந்தை நிறுத்தாமல் அழுமானால், அல்லது அழுகை வழக்கத்தைவிட உச்சத்தில் இருந்தால், அதனை உங்கள் மருத்துவரிடம் எடுத்துச் செல்லுங்கள்.

    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    பண்டிகை நாட்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    அரசு
    விடுமுறை
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    ஆன்மிக தகவல்கள்
    வாஸ்து
    தகவல்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    திருமண
    பொருத்தம்
    பிறந்த நாள்
    பலன்கள்
    கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    Baby
    Names
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்
Tamil Daily Calendar 2023 | Tamil Monthly Calendar 2023 | Tamil Calendar 2023 | Tamil Muhurtham Dates 2023 | Tamil Wedding Dates 2023 | Tamil Festivals 2023 | Nalla Neram 2023 | Amavasai 2023 | Pournami 2023 | Karthigai 2023 | Pradosham 2023 | Ashtami 2023 | Navami 2023 | Karinal 2023 | Daily Rasi Palan |