எட்டாவது அத்தியாயம் |
(அக்ஷரப்ரஹ்ம யோகம்)
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத அஷ்டமோ அத்யாய:।
அக்ஷரப்ரஹ்ம யோகம்
(மரணத்திற்கு பின்னால்)
அர்ஜுன உவாச।
கிம் தத் ப்ரஹ்ம கிமத்யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம।
அதிபூதம் ச கிம் ப்ரோக்தமதிதைவம் கிமுச்யதே॥ 8.1 ॥
அர்ஜுனன் கேட்டது : மனிதருள் சிறந்தவனே ! பிரம்மம் எது ? ஆன்மா எது ? அதிபூதம் எது ? அதிதெய்வம் என்று எது சொல்லபடுகிறது ?
அதியஜ்ஞ: கதம் கோ அத்ர தேஹே அஸ்மிந்மதுஸூதந।
ப்ரயாணகாலே ச கதம் ஜ்ஞேயோ அஸி நியதாத்மபி:॥ 8.2 ॥
கிருஷ்ணா ! இந்த உடம்பில் அதியஜ்ஞன் யார் ? அவர் எப்படி இருக்கிறார்?, சுயகட்டுப்பாடு உடையவர்கள் மரண காலத்திலும் உன்னை எப்படி நினைக்கிறார்கள் ?
ஸ்ரீபகவாநுவாச।
அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவோ அத்யாத்மமுச்யதே।
பூதபாவோத்பவகரோ விஸர்க: கர்மஸம்ஜ்ஞித:॥ 8.3 ॥
ஸ்ரீ பகவான் கூறினார்: பிரம்மம் அழிவற்றது, மேலானது, அதன் இயல்பு ஆன்மா என்று சொல்லபடுகிறது. உயிர்களை உண்டாக்கி வளர செய்வதாகிய வேள்வி கர்மம் எனபடுகிறது.
அதிபூதம் க்ஷரோ பாவ: புருஷஷ்சாதிதைவதம்।
அதியஜ்ஞோ அஹமேவாத்ர தேஹே தேஹப்ருதாம் வர॥ 8.4 ॥
உடல் தரித்தவர்களுள் உயர்தவனே ! அழியும் பொருள் அதிபூதம் எனபடுகிறது. உடம்பில் உறைபவன் அதிதெய்வம், இந்த உடம்பில் அதியஜ்ஞமாக நானே இருக்கின்றேன்.
அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம்।
ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஷய:॥ 8.5 ॥
மரண காலத்தில் யார் என்னையே நினைத்தவாறு உடம்பை விட்டு செல்கிறானோ அவன் என் நிலையை அடைகின்றான். இதில் சந்தேகம் இல்லை.
யம் யம் வா அபி ஸ்மரந்பாவம் த்யஜத்யந்தே கலேவரம்।
தம் தமேவைதி கௌந்தேய ஸதா தத்பாவபாவித:॥ 8.6 ॥
குந்தியின் மகனே ! இறுதி காலத்தில் எந்த பொருளை நினைத்தவாறு ஒருவன் உடம்பை விடுகின்றானோ, எப்போதும் அந்த பொருளையே நினைக்கின்ற அவன் அந்த பொருளையே அடைகின்றான்.