27.4.2017 கார்த்திகை விரதம் |
இன்று கார்த்திகை விரதமாகும் இது நட்சத்திர அடிப்படையில் மாதந்தோறும் அனுஷ்டிக்கப்படுகிறது. முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமான இடத்தினை பெறுகின்றது. கார்த்திகை விரதத்தை கைக்கொள்வோர் மேலான பதவிகளை அடைவர் என்றும் நல்ல பலன்களை பெறுவார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நாரத முனிவர் 12ஆண்டுகள் இந்த விரதத்தினை அனுஷ்டித்து மற்றைய முனிவர்களையும் விட எல்லா உலகமும் சுற்றி வரக்கூடிய வரத்தினை பெற்றார் என புராணக்கதைகளில் கூறப்பட்டுள்ளது.
கலியுகக்கடவுளான முருகப்பெருமானை நினைந்து இந்த நாளில் விரதமிருந்து வழிபட்டால் சகலசௌபாக்கியங்களையும் பெறுவார்கள் என்று நம் முன்னவர்கள் கூறியுள்ளதனால் இன்று கந்தனை வணங்கி அருள் பெறுவோமாக