Home

    சிம்மம் ராசி பலன் 2020 (Simmam Rasi Palan 2020)


    சிம்மம் ராசி பலன் 2020
    எதையும் வெளிப்படையாக கூறும் சிம்ம ராசிக்காரர்களே, உங்களுக்கு சனி 6ஆம் இடத்தில் மறைந்து அமோகமான பலன்களை கொடுத்தாலும், 12-ஆம் இடத்தைப் பார்க்கும் சனி சில சங்கடங்களையும், வீண் விரயங்களையும் தரப்போகிறார். மற்றபடி இந்த வருடம் சந்தோஷமான வருடமாக தான் அமையும். சுப விசேஷங்களினால், சுபவிரயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. சொந்த வீடு, மனை, வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் உறவினர்களிடையே மதிப்பும் மரியாதையும் உங்களுக்கு அதிகமாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத் தலைவிகளுக்கு இந்த வருடம் சந்தோஷமாக அமையும். உடல் நலத்தில் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உடல் நலனை அக்கறையாக பார்த்துக் கொள்வது நல்லது. உடல் நலக் குறைவினால் மருத்துவச் செலவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. வீட்டில் களவு போவதற்கான வாய்ப்பு உள்ளதால் உங்கள் பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. பண பரிமாற்றத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.

    மாணவர்கள்: 
    மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகம் இருந்தாலும் உங்கள் சோம்பலினால் சிறுசிறு தடைகள் உண்டாகும். ஆர்வத்துடன் கல்வியில் ஈடுபடுவதால் முழுமையான வெற்றியை அடைய முடியும். இந்த வெற்றியானது நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகத்தான் இருக்கும். விடாமுயற்சியுடன் சோம்பலைத் தவிர்த்து ஈடுபடவேண்டும். கல்வியை பாதியில் விட்டவர்களும் இந்த வருடம் உங்கள் படிப்பினை தொடரலாம்.

    திருமணம்: 
    திருமண தடை விலகும். உங்கள் ராசிக்கு 7ஆம் இடமான கும்ப ராசிக்கு, விரய ஸ்தானத்தில் சனி இருப்பதால் திருமண செலவு ஏற்படும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வருடம் நிச்சயம் உங்கள் வீட்டில் குழந்தையின் அழுகை ஒலிக்கும்.

    வேலை: 
    உங்கள் திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தில், எதிர்பார்த்த பதவியில் நிச்சயம் வேலை வாய்ப்பு அமையும். விடாமுயற்சி ஆனது உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும்.

    வேலைக்கு செல்பவர்களுக்கு 
    அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். நல்ல வருமானம் கொடுக்ககூடிய ஆண்டாக இது அமையும். உங்களின் வாக்குவன்மை அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு உங்கள் அலுவலகத்தில் அனைவரும் செவி சாய்ப்பார்கள். உங்கள் மேலதிகாரியிடம் பாராட்டை பெறுவீர்.

    சொந்தத் தொழில் 
    மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உங்கள் தொழில் மேன்மை அடைய நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய காலம் இது. உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள். அதிர்ஷ்டலஷ்மி உங்கள் கதவை தட்டும் நேரம். சற்று சோம்பல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விழிப்புணர்ச்சியுடன் செயல்பட்டு உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு, உங்கள் தொழிலை வளர்க்க நல்ல காலம் இது. வங்கிக் கடன் கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரும் காலங்களில் உங்கள் வாழ்க்கையில் சுபிக்ஷ்ம் நிறைந்து இருக்கும். குலதெய்வ வழிபாட்டின் மூலம் சங்கடங்களை தவிர்க்கலாம். வியாழக்கிழமைகளில் ராகவேந்திரர், ஷுரடி பாபா மகான்களின் கோவிலுக்கு சென்று வருவது சிறப்பான பலனை தரும். பசுவிற்கு பச்சரிசி, வெல்லம் வியாழக்கிழமைகளில் தருவது நல்லது.
    நாள் காட்டி மாத காட்டி ராசி பலன்
    Baby
    Names
    வாஸ்து
    தகவல்
    பிறந்த நாள்
    பலன்கள்
    இந்து
    பண்டிகை
    கிறிஸ்துவ
    பண்டிகை
    முஸ்லீம்
    பண்டிகை
    சுபமுகூர்த்த
    நாட்கள்
    கரி
    நாள்
    விரத
    தினங்கள்
    அரசு
    விடுமுறை
    அமாவாசை
    நாட்கள்
    பௌர்ணமி
    நாட்கள்
    பஞ்சாங்கம் ராகு,குளிகை
    எமகண்டம்
    அஷ்டமி,நவமி
    சிவராத்திரி
    திருமண
    பொருத்தம்
    ஆன்மிக
    தகவல்கள்
    ஆன்மிக
    பலன்கள்
    மருத்துவ
    குறிப்புகள்
    கவிதைகள் கடவுள்
    புகைப்படம்
    பயனுள்ள தகவல்கள்
    பொது
    அறிவு
    திருக்குறள் காதல்
    பொருத்தம்

Tamil Daily Calendar 2024 | Tamil Monthly Calendar 2024 | Tamil Calendar 2024 | Tamil Muhurtham Dates 2024 | Tamil Wedding Dates 2024 | Tamil Festivals 2024 | Nalla Neram 2024 | Amavasai 2024 | Pournami 2024 | Karthigai 2024 | Pradosham 2024 | Ashtami 2024 | Navami 2024 | Karinal 2024 | Daily Rasi Palan |